இலங்கை பொறியியலாளர் நிறுவகம் 2012ம் ஆண்டில் சாதனை புரிந்த பொறியியலாளரைக் கெளரவிக்கு முகமாக பொறியியற்றுறை சாதனையாளர் விருதினை வழங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக நிறுவன நிறைவேற்றுச் செயலாளர் தெரிவிக்கின்றார்.
பொறியியற்றுறை முயற்சியாளர் விருது, பொறியியற்றுறை இதழியற்றுறைச் சாதனையாளர் பட்டயம் பெற்ற இளம் பொறியியலாளர் விருது, பட்டம் பெற்ற பொறியியலாளர் விருது கழகப் பொறுப்பும் சூழலுக்குமான விருது, பொறியியல் மரபுரிமை விருது, பொறியியல் சார் கல்வி விருது, பொறியியற்றுறைசார் நிறுவன விருது, புகழ்வாய்ந்த தனி நபர் பொறியலாளருக்கான விருது என்பன இவ்விருது வழங்கல் திட்டத்தில் உள்ளடங்குகின்றன. விருதுக்கான விண்ணப்பங்களை www.lest.lk எனும் இணையத் தளத்தில் பதிவிறக்கம் செய்து, இம்மாதம் 16ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும்.
Leave a comment