கருணா, ஹிஸ்புல்லாவின் சகோதரிமாரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டி

கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட, அமைச்சர்களின் உறவினர்கள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

 

அமைச்சர் அதாவுத செனிவிரத்னவின் மகன், அமைச்சர் சந்திரசேனவின் சகோதரர், அமைச்சர் ஜெயதிஸ்ஸ ரணவீரவின் மகன், அமைச்சர் ஜெகத் பாலசூரியவின் மகன், அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரின் மகன், பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் சகோதரி, அமைச்சர் அதாவுல்லாவின் மகன், அமைச்சர் ஜோன் செனிவிரத்னவின் மருமகன், பிரதி அமைச்சர் கருணாவின் சகோதரி உள்ளிட்ட பலர் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் ஆளும் கை்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட விண்ணப்பித்த 467 பேருக்கு கடந்த வெள்ளிக்கிழமை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், ஆளும்கட்சியின் சார்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்களுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்படாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

எனினும் நேர்முகத் தேர்வுக்குப் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமைச்சர்களின் உறவினர்கள் தொடர்பான இறுதிமுடிவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய குழுவே மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.

-tamilwin

Published by

Leave a comment