வருடாவருடம் இங்கிலாந்து, விம்பிள்டன் நகரில் இடம்பெறும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2 மணிக்கு ஆரம்பமாக இருக்கின்றது. 6 முறைகள் விம்பிள்டன் சம்பியனை வென்ற சுவிட்சர்லாந்து இளம் நட்சத்திரமான ரோஜர் பெடரர் யை எதிர்த்து ஸ்கொட்லாந்து வீரரான அண்டி முரே எதிர்த்தாட இருக்கின்றார்.
உலகின் பல கோடி மக்களைக் கவர்ந்த விளையாட்டாகவும் செல்வமிக்க மற்றும் உயர்தர விளையாட்டுக்களில் ஒன்றாகவும் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளைக் காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் விம்பிள்டனில் சூழ்ந்திருக்கின்றனர். இச்சுற்றுப் போட்டியைக்காண்பதற்கு உலக உதைப்பந்தாட்ட நட்சத்திரங்கள், டென்னிஸ் நட்சத்திரங்கள், சினிமா நடிகர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ராஜதந்திரிகள் என்று படையெடுத்துள்ளதால் நுழைவுச்சீட்டுக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஓரு நுழைவுப்பத்திரத்தின் பெறுமதி பிரித்தாணிய ஸ்ரேலிங் பவுண் 4000க்கு (Rs. 820,000) மேல் விற்கப்பட்டு வருகின்றன.
பிரித்தாணியா சார்பாக பிரித்தாணிய பிரதமர் டேவிட் கமரூன், அரச பரம்பரைக்குடும்பத்தினர், உதைப்பந்தாட்ட வீரர்கள் மற்றம் பயிற்றுவிப்பாளர்கள் என்று இவ் இறுதிப் போட்டியைக் காணவுள்ளனர்
இப்போட்டியில் பெடரர் வெற்றியீட்டினால் 7வது முறையாக விம்பிள்டன் சம்பியனை முடிசூடியவராக சாதனை படைப்பார். அல்லது அண்டி முரே வெற்றியீட்டினால் 76 ஆண்டுகளுக்குப் பின்னர் ஓர் பிரித்தாணிய வீரர் விமபிள்டன் சம்பியனாக முடி சூடிக்கொன்ட சாதனையைப் படைப்பார். ‘பிரட் பெரி’ எனும் பிரித்தாணிய வீரர் 1936ல் இறுதியாக விம்பிள்டன் பட்டத்தை வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில போட்டிகளை இந்திய கிரிக்கட் வீரர் சச்சின் டெல்டுல்கார் தனது குடும்பத்துடன் காண வந்திருந்தார். இதே போல் உலக பிரபலங்கள் படையெடுத்தவண்ணமிருக்கின்றனர்.
இந்நிலையில் மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் முகாமையாளரான ‘சேர் அலக்ஸ் பேர்கிஸன்’ ‘அண்டி முரே நிச்சயமாக பிரித்தாணிய மக்களை நாளை சிரிக்கவைப்பார்’ என கூறி இருக்கின்றார். இவர் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர். மேலும் ஸ்கொட்லாந்து மக்கள் தங்களின் நீண்டநாட் கனவு இன்று நிஜமாகும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
![1322823019_0[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/1322823019_01.jpg?w=150&h=108)
![Championships Logo Jpeg[2]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/championships-logo-jpeg2.jpg?w=150&h=150)
![Andy-Murray-006[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/andy-murray-0061.jpg?w=150&h=90)
Leave a comment