தேர்தல் சட்டத்தை மீறுபவர்கள் உடன் கைது செய்யப்படுவர்!


-MMS

கலைக்கப்பட்ட மாகாணசபைகளுக்குரிய தேர்தல்கள் நடைபெற இருப்பதற்கு முன்னரே இலங்கை அரசியலிலும் கட்சிகளுக்குள்ளும் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தவகையில் தேர்தல் விதிமுறைகளை வேட்பாளர்களும் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் கடைப்பிடிக்கவேண்டி தேர்தல் சட்டங்கள் அமுலுக்கு வருகின்றன.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் போஸ்டர், கட்அவுட்களை காட்சிபடுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். பசைவாளிகளை மாணவர்களிடத்திலும் தொண்டர்களிடத்திலும் அரசியல்வாதிகள் கொடுத்து நகரத்தை மாசுரச்செய்வது இதவரை நடந்துவந்தவை. எனினும் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறா என அரசும் கடுமையாக எச்சரித்திருக்கின்றது.

மாகாண சபை சட்டத்திற்கு அமைய தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் போஸ்டர் காட்சிப்படுத்தும் வேட்பாளரை பிடியாணை இல்லாமல் கைது செய்ய முடியும் என தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார்.

அதனால் மாகாண சபைத் தேர்தல் சட்ட விதிகளை மீறும் வேட்பாளர்கள் தராத்திரம் பாராது குறித்த இடத்திலேயே கைது செய்யப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை தேர்தலில் சட்டத்தை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக காமினி நவரத்ன கூறியுள்ளார்.

என்ன சட்டமாக இருந்தாலும் ஆளும் கட்சிக்காரர்கள் அண்மைக்காலமாக இவ்வாறான தேர்தல் சட்டங்களை மீறி வந்ததும் பொறுப்பு வாய்ந்தவர்கள் கண்மூடி இருந்ததும் கவனிக்கத்தக்கது.

Published by

Leave a comment