இலங்கை பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய நிர்வாக கட்டிடத்தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்காக மாதிவெல பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபை மாதிவெல மற்றும் மிரிஹான பகுதிகளில் 150 ஏக்கர் தாழ்நிலக் இதற்கான காணியை பெற்றதுடன் உத்தேச அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மஹரகமை ஜயவர்த்தனபுர கோட்டை ஆகிய பிரதேச செயலாளர்கள் மூலம் குறித்த காணிக்;கான புவியியல் ரீதியான உறுதிப் பத்திரங்களைப் பெறப்பட்டன.
இந்த உறுதிப்பத்திரங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் உத்தேசிக்கப்பட்ட புதிய பாராளுமன்ற நிர்மாண நடவடிக்கைகளுக்காக இலங்கை பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-அரசாங்க தகவல் ஊடகம்
Leave a comment