கைவிடப்பட்ட நிலையில் 15 நாட் குழந்தை கண்டெடுப்பு

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிர்தௌஸ் நகர் கடற்கரையோரத்திலிருந்து கைவிடப்பட்ட நிலையில் 15 நாட்கள் நிரம்பிய கைக்குழந்தையொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முற் சக்கர வண்டியொன்றில் அனாதாரவாக கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த குழந்தையொன்றை அந்த முற்சக்கர வண்டியின் சாரதியும் கடற்கரையிலிருந்த பொதுமக்கள் சிலரும் கண்டெடுத்து காத்தான்குடி நகர சபை தலைவருக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் – காத்தான்குடி பொலிசாருக்கு இந்த தகவலை வழங்கியதுடன் குழந்தையை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் அம்ஜத் ஹசன் குழந்தையை பரிசோதனை செய்தநிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காத்தான்குடி வைத்தியசாலைக்கு சென்று குழந்தையை பொறுப் பேற்று அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலுள்ள சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-Tamilmirror

Published by

Leave a comment