மட்டு வாவியில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

-MMS

இன்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில்  மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள வாவியில் இருந்து இறந்த நிலையில் காணப்பட்ட பெண் ஒருவரின் உடலை அப்பகுதி மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர். மீனவர்களின் உதவியுடன் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு – ஞானசூரியம் சதுக்கத்தை சேர்ந்த லக்ஷ்மி (52வயது) என்பவரது என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கணவரிடம் இருந்து விவாகரத்துப்பெற்று தனிமையில் வசித்துவந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Published by

Leave a comment