காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கரம் போட்டியிலும், 15 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான செஸ் (சதுரங்கம்) போட்டியிலும் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாடசாலை அதிபர் எம்.எம். இஸ்மாலெப்பை தெரிவித்தார்.
இப்பாடசாலையின் வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்திற்கு பாடசாலையின் நற்பெயருக்கு மெருகூட்டிய வீராங்கனைகளுக்கும், பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர்களான எப்.எப்.எம். நஸ்பர், எஸ். ராஜ்பவான், செல்வி ரேனுகாவதி ஆகியோருக்கும் இப்பாடசா லையின் மாணவிகளும், ஆசிரியர்களும், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பி னர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து தேசிய மட்டத்தில் வெற்றிபெற ஊக்கமளித்து வருவதாகவும் பாடசாலை அதிபர் இஸ்மாலெப்பை மேலும் தெரிவித்தார்.
-Thinakaran
Leave a comment