சேறு பூசும் இணைய தளங்கள் அனைத்தும் முடக்கப்படும்: அரசாங்கம்

தனிப்பட்ட நபர்கள் மற்றும் அரச தரப்புக்களுக்கு எதிராக சேறு பூசும் இணைய தளங்கள் அனைத்தையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் சில நாட்களில் சேறு பூசும் இணைய தளங்கள் அனைத்துமே முடக்கப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பதிவு செய்யப்படாத பல இணைய தளங்கள் வெளிநாடுகளிலிருந்து செயற்படுகின்றன.

இவை செயற்படும் சரியான இடங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை. எனினும், அவ்வாறான இணைய தளங்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியல்வாதிகள் மட்டுமன்றி ஏனைய பல தரப்பினருக்கும் இணைய தளங்களினால் பாதிப்பு ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

-tamilwin

Published by

Leave a comment