ஹோர்முஸ் கால்வாய் ஊடாக எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களை கண்கானிக்கும் ஓர் ஈராணிய படை வீரர்.
-MMS
வளைகுடாவை தன் காலடியின் ஆதிக்கத்தின் வைத்திருக்கும் அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகளுக்கு, அடிபணியாத சிக்கலுக்குரிய நாடாக இன்னும் இருந்துவருவது ஈரான் ஆகும். தலையிடிக்கு மேல் தலையிடியாக பதிலுக்கு பதில் ஈரான் அமெரிக்காவுக்கு அன்று முதல் இன்றுவரை தலைசாய்க்காது பதிலடிகளை தெரிவித்து அல்லது செயற்படுத்தி வகின்றது. ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்று குற்றம் சுமத்தியதுடன், அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் பொருளாதார தடையையும் விதித்துள்ளன.
இந்நிலையில் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் வெளியுறவு கொள்ளை கமிஷன் தலைவர் இப்ராஹிம் அகாஹ் முகம்மாதி, ஈரான் நாடாளுமன்றத்திற்கான மஜிலிசில் மசோதா ஒன்றை கொண்டுவந்தார்.
அதில் ஐரோ்ப்பிய கூட்டமைப்பு நாடுகள் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி, பொருளாதரா தடையும் விதித்துள்ளனர். அதற்கு பதிலடியாக பாரசீக வளைகுடாவின் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்மூஸ் கால்வாயினை மூட வேணடும் என வலியுறுத்தினார். இதற்கு 290 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 100 பேர் ஆதரவளித்திருக்கின்றனர்.
ஹோர்மூஸ் கால்வாய் வழியாகவே ஆசிய, ஐரோப்பிய நாடுகள் தங்களது எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
![3754432-3x2-940x627[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/3754432-3x2-940x6271.jpg?w=300&h=200)
Leave a comment