– தினகரன் ஆசிரியர் தலைப்பு
கிழக்கு மாகாணசபை, சப்ரகமுவ மாகாண சபை, வடமத்திய மாகாண சபை ஆகியவற்றுக்கான தேர்தலை அரசியல் சாசனத் திற்கு அமைய நடத்துவதென்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இதனால், இந்த மூன்று மாகாண சபைகளை சார்ந்த பிரதேசங்களில் ஏற்கனவே தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.
ஒரு கட்சியின் சார்பில் யார் யாரை வேட்பாளர்களாக அமர்த்துவது, கலைக்கப்பட்ட மாகாண சபைகளில் அங்கத்தவர்களாக இருந்தவர் களை மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதா? போன்ற முக்கிய தீர்மானங்களை இப்போது அரசியல் கட்சிகள் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றன.
இதனால் இம் மாகாணங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் கட்சி களின் தலைமைப்பீடங்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க ஆரம் பித்து வருவதாக தெரிய வருகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுவை ஜுலை 12 முதல் 19ம் திகதி வரை தாக்கல் செய்ய வேண்டு மென தேர்தல்கள் ஆணையாளர் ஏற்கவே அறிவித்துள்ளார்.
தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்பதை தேர்தல் சட்டம் வேட் பாளர்களுக்கு வலியுறுத்துகின்றது. பொதுக் கூட்டங்களை இரவு 10 மணிக்கு பின்னர் நடத்தக் கூடாது, அனுமதியின்றி ஊர்வலங்களை நடத்தக் கூடாது போன்ற விதிகளை தேர்தல் ஆணையாளர் அறி விப்பார். அத்துடன் வேட்பாளர்களின் கட்சி சின்னத்தையும், விருப்பு இலக்கத்தையும் கொண்ட சுவரொட்டிகளும் முற்றாக தடை செய் யப்பட்டுள்ளன.
சட்டம் இவ்விதம் தடை விதித்திருந்தாலும் வேட் பாளர்கள் அந்தத் தடையை பொருட்படுத்தாமல் சுவரொட்டிகளை கண்ட, கண்ட மதில்களில் ஒட்டுவதை நிறுத்துவதில்லை. சுவரொட்டி களுக்கு தேர்தல் சட்டம் தடைவிதித்திருக்கின்ற போதிலும் அவ ற்றை ஒட்டும் வேட்பாளர்களை சட்டபூர்வமாக தண்டிப்பதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு கொடுக்கப்படவில்லை.
பொலிஸாரால் ஒரு விடயத்தை மட்டுமே செய்யக் கூடியதாக இருக் கிறது. அவர்கள் சுவரொட்டிகளை கிழித்தெடுத்தும், வேட்பாளர் களின் பதாகைகளை உடைத்தெறிவதையும் விட வேறொன்றுமே அவர்களினால் செய்ய முடியாது. தேர்தல் காலத்தில் சுவரொட்டி களை அகற்றுவதற்காக பொலிஸ் திணைக்களத்திற்கு திறைசேரி ஒரு குறிப்பிட்ட தொகையைக் கூட ஒதுக்கீடு செய்கிறது. இதனால் தேர்தல் வரும்போது அழகான நகரங்களும், கிராமப் புறங்களும் சுவரொட்டிகளினால் அவலட்சணமாக காட்சியளிக்கின்றன.
சுவரொட்டிகள் வெறுமனே ஒரு வேட்பாளரை அப்பிரதேச மக்களுக்கு அறிமுகம் செய்து, அவர்களின் ஆதரவை பெறுவதற்கு செய்யும் ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. ஆயினும், சில விஷமிகள் சுவ ரொட்டிகளை தங்கள் எதிராளிகளை கிண்டல் செய்வதற்கும் அவ மானப்படுத்துவதற்கும் பயன்படுத்தி வருவதை நாம் கடந்த காலத் தில் பார்த்திருக்கிறோம்.
ஒரு வேட்பாளரை பற்றி அவதூறான கருத் துக்களை கொண்ட சுவரொட்டிகளும் ஒட்டப்படுகின்றன. அந்த சுவரொட்டிகளை ஒட்டியவர் யார் என்பதை தெரியாதிருப்பதனால் அத்தகைய அவதூறான சுவரொட்டிகளை ஒட்டியவர்களுக்கு எதி ராக அரசாங்கத்தினால் சட்டபூர்வமாக தண்டிக்க முடியாத நிலை யும் இருந்து வருகிறது.
தேர்தல் காலத்தில் பொலிஸாருக்கு கூடுதலான பொறுப்புகள் கொடுக் கப்பட வேண்டியிருக்கின்றது. கிழக்கு மாகாணம் போன்ற தமிழ் பிரதேசங்களில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் இப்போது ஒரு பொலிஸ் நிலையத்திற்கு குறைந்த பட்சம் 5 தமிழ் தெரிந்த பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி வடமாகாணத்திலும் இன்று அரசாங்கம் கடைப்பிடிக்கும் நிலையான மொழிக்கொள்கையினால் தமிழ் தெரிந்த பொலிஸார் நியமிக்கப்பட்டி ருக்கிறார்கள். இதனால் வடக்கிலும், கிழக்கிலும் உள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்திற்கும் சிறுபான்மை மக்களாகிய தமிழர்களும், முஸ்லிம்களும் தங்கள் முறைப்பாடுகளை தமிழிலேயே செய்து அதனை தமிழிலேயே பதிவு செய்வதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இது சிறுபான்மை மக்களின் மொழி என்ற அடிப்படை உரிமையை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்த ஒரு நல்ல திட்டமாகும். தேர் தல்கள் இலங்கையில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் நடக் கின்றன. குறிப்பாக பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் தேர்தல்கள் மிகவும் அமைதியான முறையில் வன்முறைகளின்றி நடத்தப்படு கின்றன.
அங்கு தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு வேட்பாளர் மற்ற வேட்பாளரை அரசியல் ரீதியில் கொள்கைகளை அடிப்படை யாக வைத்து தாக்கி அல்லது தண்டித்து பேசுவார்களே ஒழிய, எதிரணி வேட்பாளர்களை அவமானப்படுத்தக்கூடிய வகையில் தாக்கிப் பேசுவதில்லை. இதுவே அந்த நாடுகளின் ஜனநாயக சம் பிரதாயமாகும்.
இலங்கையிலும் இந்த நிலைமை தோன்ற வேண்டுமானால், நம்நாட்டு மக்கள் முதலில் தேர்தல் சட்டத்தை நன்கு வாசித்து, அறிந்து அத ற்கு தீங்கிழைக்காத வகையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்விதம் செய்தால் நாட்டில் அமைதியும் ஜனநாயக மும் தழைத்தோங்கும்.
எனவே, செப்டம்பர் மாத முற்பகுதியில் நடைபெறவுள்ள இந்த மூன்று மாகாணசபை தேர்தல், எங்கள் நட்டின் வன்முறை கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, அமைதியான தேர்தலாக நடத்தப்படுவதற்கு பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் தங்களது பூரண ஒத்து ழைப்பை வழங்குவது அவசியம்.
Leave a comment