உலக நேரக் கடிகாரத்தில் லீப் வினாடி மேலதிகம் சேர்ப்பு

ஒரு நூற்றாண்டில் 18 லீப் வினாடி அளவில் மாற்றம்

 உலக நேரக் கடிகாரத்தில் லீப் வினாடியாக ஒரு வினாடி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 30 ஆம் திகதி 23 மணி 59 நிமிடம் மற்றும் 60 வினாடியின் போது இந்த மேலதிக வினாடி இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பூமி தன்னைத்தானே சுற்றும் வேகத்திற்கேற்ப சர்வதேச கடிகாரத்தின் நேரம் தெளிவாக பதியப்பட்டுள்ளது. இதற்கமைய நேரத்தை தெளிவாகக் காண்பிக்கும் உலகில் உள்ள அணுக் கடிகாரங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் ஒரு வினாடி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அணுக் கடிகாரங்களை ஆதாரமாகக் கொண்டே சர்வதேச நேரம் தெளிவாக கணிக்கப்படுகின்ற¨மை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் கடந்த 2008, 2005 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் லீப் வினாடி இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 1972 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட லீப் வினாடி முறை பூமி யின் சுழற்சிக்கு அமைய உலகக் கடிகாரத்தை மாற்றும் அமைப்பாகும். சர்வதேச ஆய்வு கூடங்களில் அமைந்துள்ள அணுக்கடிகாரங்கள் இந்த கோட்பாட்டுக்கமைய மாற்றப்பட்டு வருகின்றன.

கடல் அலைகள், தட்ப வெப்ப நிலை மாற்றங்கள், புவியியல் நிகழ்வுகள் காரணமாக ஏற்படும் உராய்வினால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும் வேகம் வேறுபடுகிறது. இதனைக் கணித்து சர்வதேச கடிகாரத்தில் மேலதிகமாக ஒரு வினாடி சேர்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒரு நூற்றாண்டில் சர்வதேச கடிகாரத்தில் 18 வினாடி அளவில் மாற் றம் ஏற்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த லீப் வினாடி மாற்றம் ஏற் படவிட்டால் காலப்போக்கில் நள்ளிரவில் சூரியன் உதிக்கும் என லீப் வினாடிக்கு ஆதரவான சர்வதேச நேரக் கண்காணிப் பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த லீப் வினாடி முறைக்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக செயற்கைக் கோள்களை சார்ந்துள்ள கணனி மென்பொருளியலாளர்களும் அனைத்து தொழிநுட்ப பணியாளர்களும் இந்த லீப் வினாடி மாற்றத்தால் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த லீப் வினாடி முறையை கைவிடுவது குறித்து எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச தொலைத் தொடர்பு மாநாட்டில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-thinakaran

Published by

Leave a comment