ஐரோப்பா கிண்ணம் 2012: சாதனைகள் நிறைந்த ஓர் சரித்திர வெற்றியில் ஸ்பெய்ன்

-MJ
சற்று முன்னர் இடம்பெற்று நிறைவடைந்த ஐரோப்பா கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் இத்தாலியை 4:0 எனும் மிகப்பெரிய கோல்வித்தியாசத்தில் வெற்றுபெற்று, ஐரோப்பிய உதைப்பந்தாட்ட வரலாற்றில் பல சாதனைகளை படைத்திருக்கின்றது.

இந்தவகையில் சர்வதேச உதைப்பந்தாட் சம்மேளனத்தின்  (FIFA) தெரிவுப்படி 2012 ல் உலக உதைப்பந்தாட்ட கழகங்களுள் ஸ்பெய்ன் முதலாவது இடத்தைப்பெற்றிருந்தது. மற்றும் 2008 ஐரோப்பாக் கிண்ணம், 2010 உலகக்கிண்ணம், அதனைத் தொடர்ந்து தற்பொழுது 2012 ஐரோப்பா கிண்ணம் ஆகிய சிரேஷ்ட (Major Trophy) கிண்ணங்களை தொர்ச்சியாக சவீகரித்தும், சிரேஷ்ட இறுதிப் போட்டியொன்றில் இதுவரைக்கும் எந்தவொரு கழகமும் 4:0 எனும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்காத வெற்றியையும் பெற்று ஓர் வரலாற்று சாதனையை ஸ்பெய்ன் தனதாக்கிக் கொண்டுள்ளது.

மேலும் ஐரோப்பா கிண்ணத்தை எந்தவொரு அணியும் தொடர்ச்சியாக இரு வெற்றிகளைப் பெற்றிருக்கவில்லை. இன்றைய வெற்றியின் மூலமாக இச்சாதனையையும் பெற்று உலக கழகங்களுக்கு மீண்டும் ஸ்பெய்ன் சவால் விட்டுள்ளது.

போட்டியின் முதல் 45 நிமிட ஆட்டத்தில் 2 கோல்களைப் பெற்று ஸ்பெய்ன் முந்நிலையில் இருந்தது. 14வது நிமிடத்தில் முதலாவது கோலை டேவிட் சில்வா பெற்றுக் கொடுத்திருந்தார். போட்டி நிறைவடையும் போது 4:0 எனும் அபார வெற்றியில் ஸ்பெய்ன் ஐரோப்பா கிண்ணத்தை முடிசூடிக்கொண்டது. ஸ்பெய்ன் சார்பாக ஏனைய 3 கோல்களையும் முறையே அல்பா (41), டொரிஸ் (84),  மடா (88) பெற்றுக் கொடுத்திருந்தனர்.

பலவாறாகவும் எதிர்வுகூறப்பட்ட இத்தாலி இம்முறைக்கான ஐரோப்பா கிண்ணப் போட்டியில் முதலாவது தோல்வியை இன்றைய இறுதிப்போட்டி மூலமாக பெற்றுக் கொண்டது. இத்தாலி அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான ‘பலட்டொலி’ யைத் தவிர வேறு யாரும் வெற்றிக்காகப் போராடியதாக தெரியவில்லை!

உதைப்பந்தாட்ட திருவிழாவின் ஓர் மைல்கல்லாக இடம்பெற்றுவந்த ஐரோப்பா கிண்ணம் இன்றையுடன் நிறைவு பெறுகிறது. அடுத்த ஐரோப்பா கிண்ணம் 2016 கோடைகாலத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருக்கின்றது. இவ்வாறான மற்றுமொரு ஓர் போட்டிக்கு இன்னும் 4 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

Published by

Leave a comment