ஸ்ரீ லங்கா மிரர் மற்றும் ‘X நியூஸ்’ இணையத்தள அலுவலகங்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் சோதனை! 9 ஊடகவியலளார்கள் கைது!!

-MMS

ஸ்ரீ லங்கா மிரர் (srilankamirror) மற்றும்  ‘X நியூஸ்’ உடகங்களின் அலுவலகங்கள்  இன்று வெள்ளிக்கிழமை இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளதாகவும் குற்றத்தடுப்பு பிரிவினரின் சோதனையின்போது அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அலுவலக கனணிகளும் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  ஸ்ரீ லங்கா மிரர் இணையத்தள பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அரசாங்கத்திடம் இருந்து இதுசம்பந்தமாக எந்தவிதமான உத்தியோகபூர்வமான அறிவித்தல்களும் கிடைக்கப்படவில்லை.

இச்சம்பவத்தின் போது சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் 9 பேர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் உத்தியோகபூர்வமாக மேற்படி இரு ஊடக அதிகாரிகளும் தெரிவித்திருக்கின்றனர்.

Published by

Leave a comment