ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவோருக்கு நேர்முகப் பரீட்சை

கலைக்கப்பட்டுள்ள மூன்று மாகாண சபைகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினூடாக போட்டியிட விரும்பும் அங்கத்தவர்கள் அனைவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்துக்கு வருமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் 6ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழு நேர்முகப் பரீட்சைகளை நடத்துகிறது.

இந் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகவே போட்டியிட விரும்பும் அனைத்து ஸ்ரீல.சு.க. அங்கத்தவர்களுக்கும் வருமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் கலைக்கப்பட்டுள்ள கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் கள், உறுப்பினர்களும் வேட்பாளர் தெரிவுக்குழுவுக்கு கட்டாயமாக சமுகமளிக்க வேண்டும்.

மேலும் வேட்பாளராக விரும்பு பவர்களும் அன்றைய தினம் சமுகமளிக்க வேண்டும் என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

-thinakaran

Published by

Leave a comment