இன்று வருடாந்த மாநாடு கொழும்பில்
இந்நாட்டின் ஊடகத்துறை வரலாற்றில் குறிப்பாக முஸ்லிம் ஊடக வரலாற்றில் “ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்” முத்திரை பதித்த ஒரு பலம் வாய்ந்த அமைப்பாகும்.
சமுதாயப் பற்று மிக்க நல்லவர்களின் பூரணமான ஆசீர்வாதத்துடனும், ஆதரவுடனும் 16 வருடங்களுக்கு முன்னர் உருவான இந்த “முஸ்லிம் மீடியா போரம்” அடைந்த வளர்ச்சிப் படிகளை வரலாற்றுப்பதிவுகள் என்றும் கூறலாம்.
அச்சு, இலத்திரனியல் ஊடகத் துறைகளைச் சார்ந்த 665 பேர் இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
இவர்கள் 25 மாவட்டங்களில் இருந்தும் ஊடகப் பணியாற்றுபவர்கள். முஸ்லிம் ஊடகவியலாளரின் உயர்ச்சிக்காகவும், உரிமைக்காகவும் பாடுபட்டு 16 ஆண்டுகளை இந்த அமைப்பு கடந்துள்ளதென்றால் அது பெரும் சாதனைதான்.
அந்தச் சாதனையின் சொந்தக் காரர்களான ஊடகவியலாளர்கள் இதை எண்ணிப்பார்த்து இன்றைய தினத்தில் மகிழலாம், பெருமிதம் கொள்ளலாம், பூரிப்பும் அடையலாம்.
ஊடகவியலாளர்களுக்குப் பல்கலைக்கழக மட்டத்தில் ஊடகத் துறை டிப்ளோமா சான்றிதழைப் பெற்றுக்கொடுக்க முன்னோடியாக இருந்தது “முஸ்லிம் மீடியா போரம்” என்றால் அதை மறுக்க முடியாது.
தமிழில் ஊடகத்துறை டிப்ளோ மாவை நடத்த முடியாதென்ற பாரம்பரியத்தைப் போக்கி நூற்றுக் கணக்கானோரை ஊடக டிப்ளோமா தாரிகளாக மாற்ற முஸ்லிம் மீடியா போரமே வழிகோலியது.
இன்று இந்த ஊடக டிப்ளோமா வுடன் அநேகர் ஊடகத்துறையில் பிரகாசிக்கின்றனர். இதில் உதவிய நல்ல உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.
“ஊடகமே எங்கள் உலகம்” என்று கூறும் அளவுக்கு ஊடகத்துறை இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எனவே, ஊடகத்துறை பற்றி இளைய தலைமுறையினருக்கு செயலமர்வுகளையும், கருத்தரங்குக ளையும் நடத்தி குறிப்பாக பாடசாலை மாணவ சமூகத்துக்கு இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்துவதில் முஸ்லிம் மீடியா போரத்தின் பங் களிப்பு போற்றத்தக்கது.
நாடு தழுவிய ரீதியில், நேரவசதிக்கு ஏற்ப இந்த பாடசாலை மாணவ சமூகத்தை இலக்கு வைத்து நடத் தப்படும் செயலமர்வுகள் நல்ல வர வேற்பைப் பெற்றுள்ளன.
முஸ்லிம் மீடியா போரத்தின் வளவாளர்கள் தியாக மனப்பாங்குடன் நேரகாலத்தை ஒதுக்கி மாணவச் சமூகத்துக்கு ஊடகத்துறையில் விழிப்பூட்டி வருகின்றனர்.
முஸ்லிம் மீடியா போரம் என்பதால் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் தொடர்பாகவும் முஸ்லிம் மீடியா போரம் உன்னிப்புடனும், அவதானத்துடனும் செயற்பட்டு வருகிறது.
முஸ்லிம் எதிர்ப்பு பிரசாரங்களை முறியடிக்க காத்திரமான அவதா னிப்புக்களை தொடர்ச்சியாக நடத்தி தவறுகளை சம்பந்தப்பட்டோரிடம் சுட்டிக் காட்டி நிலைமையைச் சீராக்குவதில் முஸ்லிம் மீடியா போரத்தின் பணிகள் உயரியவை. பாராட்டத்தக்கவை.
எட்டு முக்கிய குறிக்கோள்களைக் கொண்டே முஸ்லிம் மீடியா போரம் உருவாக்கப்பட்டது.
o ஊடகச் சுதந்திரத்தின் மேலான கொள்கைகளைப் பாதுகாத்தல்.
o இலங்கையிலுள்ள சகல முஸ்லிம் ஊடகவியலாளர்களையும் ஒரு குடை நிழலில் கொண்டு வருதல்.
o முஸ்லிம் சமூகத்தின் நலன்களைப் பாதுகாத்தல்.
o ஊடகச் சுதந்திரத்துக்கு ஊறு நேர்ந்தால் அதனைப் பாதுகாத்தல்.
o ஊடகவியலாளர் தெரிவிக்கும் சுதந்திர கருத்துக்கள் மீதான உரிமை மறுப்புக்கு எதிராகப் போராடுதல்
o சம்பந்தப்பட்டவர் முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினராக உறுப்பினர் இல்லாதவராக இருந்தாலும் கூட இவ்விடயத்தில் கவனம் கொள்ளல்.
o தொழிலைச் செவ்வனே மேற்கொ ள்ள உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்.
o தொழில் தரத்தை அபிவிருத்தி செய்வதற்காக விரிவுரைகள், பயிற்சித் திட்டங்கள், கருத்தரங்குகளை நடத்துதல்
o முஸ்லிம் மீடியா போரத்தின் இலட்சியங்களை அடைவதற்காக நட்புறவு நிறுவனங்களுடன் உள்நாட்டி லும், வெளிநாட்டிலும் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
o ஊடகங்களில் இஸ்லாம் பற் றியும், முஸ்லிம்கள் பற்றியும் தவறான கருத்துக்கள் வெளியிடப்பட்டால் தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல்
இந்த உயரிய கோட்பாடுகளை அமுலாக்குவதில் முஸ்லிம் மீடியா போரம் பாடுபட்டு வருகிறது.
34 உறுப்பினர்களுடன் சிறிய அள வில் உருவான இந்த அமைப்பு பலம் வாய்ந்த ஊடக அமைப்பாக வளர்ச்சி கண்டுள்ளமை சமூகத்துக்கும் பெருமை யாகும். இது தொடர்ந்து வளர வேண்டும்.
ஊடகத்துறையில் பங்காற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களை ஆண்டுதோறும் முஸ்லிம் மீடியா போரம் விருது வழங்கி கெளரவித்து பொற்கிழியும் வழங்கி பெருமைப் படுத்துகிறது.
இம்முறையும் எட்டு சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இன்று கெளரவிக்கப்படுகின்றனர்.
ஊடகத்துறைக்கு இவர்கள் ஆற்றிய, ஆற்றி வரும் பணிகள் இனம் காண ப்பட்டுள்ளன.
பன்னூலாசிரியர் “சேவைச் செம்மல்” மானா மக்கீன், சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் முன்னாள் வீரகேசரி ஆசிரியர் எஸ். நடராஜா, மூத்த சிங்கள ஊடகவியலாளர் கே. பியசேன, தகவல் திணைக்கள ஊடக அதிகாரி ரiட் நூருல்ஐன், “நவமணி” ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சத்தார், வானொலி முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் ஹாபிஸ் முஹம்மது ஹனிபா, “நவமணி” பிரதி ஆசிரியர் தாஹா முஸம்மில், வானொலிப் புகழ் ஆயிஷா ஜுனைதீன் ஆகிய என்மருமே இன்று விருது பெறுகின்றனர். இவர் களுக்கு தமது வாழ்த்துக்கள், பாராட் டுக்கள்.
அச்சு, இலத்திரனியல் ஊடகத்துறைக ளோடு ஆரம்ப நாள் தொட்டு இணைந்து அருமையான ஊடகப் பணியை இன்றும் தொடரும் முன்னாள் ஊடக ஆலாட்சி அதிகாரியும், பாரா ளுமன்ற பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வருக்கும் இன்றைய விழாவில் விசேட ஊடக விருது வழங்கப்படுகிறது.
அல்ஹாஜ் அஸ்வர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினர். அதன் வளர்ச்சியில் ஆர ம்ப காலம் தொட்டு ஈடுபட்டு வருபவர்.
அவருக்கு இன்று விருது கிடைப்ப தும் மற்றுமொரு வரலாற்று நிகழ் வாகவே பதியப் போகிறது..
ஒலிபரப்பாளர் மர்ஹ¥ம் நூராணியா ஹஸனுக்கும் இன்று ஊடக விருது வழங்கப்படுகிறது.
இவர் முஸ்லிம் மீடியா போரத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்தவர்.
இவரின் குடும்பத்தவர்களிடம் இவருக்கான விருது கையளிக்கப்படும்.
தொடர்ந்து வரும் காலங்களிலும் முஸ்லிம் மீடியா போரத்தை வளர்த்து அதன் மூலம் நல்ல பல சேவைகளை முன்னெடுக்க நாம் பாடுபடுவோம்.
இந்த உயரிய இலட்சியப் பயணத் தில் சகலரையும் இணையுமாறும் அன்புக் கோரிக்கை விடுக்கிறோம்.
எப்.எம். பைரூஸ்
முன்னாள் பொதுச் செயலாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
பிரசுரம்: தினகரன்
Leave a comment