-MMS
நேற்று புதன்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் பதுளை – கரடியனாறு வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த 31 வயதான அஸனார் சனூஸ் எனும் இளைஞர் மரணமானதாகவும் , காயங்களுக்குள்ளான நிலையில் மற்றுமொருவர் கரடினாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவரின் சடலம் கரடியனாறு வைத்தியசாலையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
Leave a comment