ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை 75 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்தது.
இந்த தொகைக்கான காசோலையை ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையின் தலைவர் கே.எம்.ஏ கொடவத்த அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் கீதான்ஜன குணவர்தன உட்டப மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
– அரசாங்க தகவல் ஊடகம்
Leave a comment