இம்முறைக்கான ஐரோப்பாக் கிண்ணப் போட்டிகள் நிறைவு பெறுவதற்கு இன்றும் இரண்டு போட்டிகள் மாத்திரமே மீதமிருக்கின்றன. இன்று வியாழக்கிழமை இரண்டாவது அரை இறுதிப்போட்டியானது, ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையில் போலண்ட்-வார்ஸோ மைதானத்தில் இன்று மாலை இடம்பெற இருக்கின்றது.
இரு அணிகளும் பலம் பொருந்திய அணிகளும் ஐரோப்பா கிண்ணத்தையும் உலகக்கிண்ணத்தையும் வென்ற பலமிக்க அணிகளாகும். ஜேர்மனி இரண்டு முறையும், இத்தாலி ஒருமுறையும் ஐரோப்பா கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா கிண்ண ஆரம்பம் முதல் விளையாட்டு ஆய்வாளர்களால் இரு அணிகள் எதிர்வு கூறப்பட்டிருந்தன. அதில் ஒன்று ஜேர்மனி. மற்றையது ஸ்பெய்ன்.
நேற்றிரவு நடைபெற்ற முதலாவது அரை இறுதிப்போட்டியில் பெனால்டி உதைகளின் மூலம் 4:2 கோல்வித்தியாசத்தில் போர்த்துக்களை வெற்றிபெற்ற ஸ்பெய்ன் இறுதிப்போட்டிக்காக காத்திருக்கின்றது. நீயா-நானா எனும் பலத்த போட்டி இன்று இரவும் விளையாட்டு இரசிகர்களை மகிழ்வித்துச் செல்லும் என்பது எதிர்பார்க்கப்பட்டிருக்கும் ஓர் விடயமாகும்.
இதற்கிடையில் நிற துவேசங்களும் இனத்துவேசங்களும் விளையாட்டு வீரர்களைப் பாதித்திருப்பதாக சில விளையாட்டு வீரர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். இத்தாலி அணியின் தலைவரும் நம்பிக்கை நட்சத்திரமுமான ‘பலடொலி’ (Balettoli) ‘தன்னை குரங்கு என்று மைதானத்தில் எதிரணி வீரர்கள் கூறுவதாகவும், வாழைப்பழங்களையும் அதன் தோலையும் தனக்கு வீசியதாகவும்’ கவலை தெரிவித்திருப்பதும் கவலைக்குரியதே!
![germanyvsitalyuefaeu_451988[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/germanyvsitalyuefaeu_4519881.jpg?w=500&h=313)
Leave a comment