ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் அணிகளுக்கான ஏலத்திற்கு சிறந்த வரவேற்புக் கிடைத்துள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் அறிவித்துள்ளது. அணிகைள குத்தகை அடிப்படையில் வாங்குவதற்கான ஏலத்தினம் நேற்று முன்தினம் நிறைவடைந் ததை அடுத்தே இலங்கை கிரிக்கெட் இந்தத் தகவலை வெளியிட் டுள்ளது.
இத்தொடரில் 7 அணிகள் பங்குகொள்ளவுள்ள நிலையில் ஒவ்வொரு அணிக்கு சராசரியாக 4. 3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஏலத்தொகையாக கோரப்பட்டுள்ளது. எனினும் வெற்றிபெற்ற ஏலத் தொகையாளர்கள் பற்றிய விபரம் இலங்கைக் கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஐ. பி. எல். தொடரோடு ஒப்பிடும்போது மிக மிகக் குறைவானது என்ற போதிலும், ஸ்ரீலங்கா பிரிமியர் லீக்கைப் பொறுத்தவரை சிறந்த வரவேற்பாகக் கருதப்படுகிறது.
முதலாவது ஐ. பி. எல். தொடரில் 8 அணிகள் மொத்தமாக 723 ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்பட்டி ருந்தன. எனினும் அண்மையில் நிறைவுபெற்ற பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரோடு ஒப்பிடும்போது இது சிறந்ததாகக் கருதப்படுகிறது.
பங்களாதேஷ் பிரிமியர் லீக்கில் ஒவ்வொரு அணியும் ஏறத்தாழ 1 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கே விற்கப்பட்டிருந்தன. பங்களாதேஷ் பிரிமியர் லீக், இந்தியன் பிரிமியர் லீக் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது ஸ்ரீலங்கா பிரிமியர் லீக்கில் அணிகள் விற்பனை செய்யப்பட் டிருக்கவில்லை.
-SL/Cricket/th
Leave a comment