இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் தெரிவு! பயிற்றுநரின் தவறால் போர்த்துக்கல் பரிதாபத் தோல்வி!!

-MJ

சற்று முன்னர் பலத்த போட்டிக்கிடையில்  முடிவடைந்த ஐரோப்பா கிண்ணத்துக்கான முதலாவது அரை இறுதிப் போட்டியில் இரண்டரை மணித்தியால போராட்டத்தின்பின் ஸ்பெய்ன் வெற்றி பெற்றுள்ளது. முதல் 90 நிமிட ஆட்டத்தில் போட்டி 0:0 என்ற ரீதியில் சமநிலையில் இருந்தது. பின்னர் 30 நிமிட மேலதிக நேரம் வழங்கப்பட்டது. எனினும் போட்டி சமநிலையிலேயே நிறைவு பெற்றிருந்தது. இதனால் 3ம் சுற்றுக்கு போட்டி சென்றது. பெனால்டி உதைகள் மூலமான வெற்றி-தோல்வி சுற்றில் 4:2 கோல் முன்னிலையில் ஸ்பெய்ன் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது.

போர்த்துக்கல் அணியை இறுதிவரை மிக நிதானத்துடன முன்னேற்றி வந்த அதன் அணியின் பயிற்றுவிப்பாளர் Bento தற்பொழுது ஊடகங்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார். போர்த்துக்கல் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரொனால்டோ வுக்கு பெனால்டி உதைகளில் முன்னிடம் கொடுக்காது 5ம் இடத்திற்கு அவரை நிறுத்திவைத்தது பாரிய தவறு என்பதை ஊடகங்களும் போட்டி வர்ணணையாளர்களும் தற்பொழுது கோடிட்டு காட்டிவருகின்றனர்.

ரொனால்டோ முதலாவது உதையைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் போட்டியின் முடிவு போர்த்துக்களுக்கே இறுதிவரை சாதகமாக இருந்தாகவும், சிறந்த வீரர்களை விட்டுவிட்டு, பதட்டப்படும் வீரர்களை பெனால்டி உதைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதகவும்  கூறுகின்றனர்.

ஸ்பெய்ன் எதிர்பார்த்தபடி போர்த்துக்களை வீழ்த்தவில்லை. போராட்டம் இரு அணிக்குமிடையில் பலமாகவே இருந்தது. நாளை நடைபெற இருக்கும் ஜேர்மனி-இத்தாலி அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணியை எதிர்வரும் ஞாயிறு மாலை ஸ்பெய்ன் இறுதிப் போட்டியில் சந்திக்கும்.

Published by

Leave a comment