அதிரவைக்கும் அரை இறுதிப்போட்டி இன்று!

-MJ

ஐரோப்பா கிண்ணப் போட்டிகள் ஐரோப்பா நாடுகளில் இனிமையான ஓர் மாலை நேரத்திலும், இலங்கை  நேரப்படி நள்ளிரவைத் தாண்டிய ஓர் இரவுப் பொழுதிலும் உதைப்பந்தாட்ட இரசிகர்களை மாத்திரமின்றி, ஏனைய விளையாட்டு இரசிகர்களையும் தாலாட்டி தொட்டுச் செல்கின்றது.

எங்கு பார்த்தாலும் கிரிக்கட்! அதைவிட ‘சீரியல்’ போன்று இழுத்துக்கொண்டே போகும் ஐ.பி.எல் போட்டிகளால் கிரிக்கட் அலுத்துப் போய்விட்டதோ என்ற அச்சம் கிரிக்கட்டில் ஏற்பட்டிருக்கின்றது. லஞ்சம், ஊழல் அற்ற நேர்மையான போட்டிகள் இவை! குறுகிய நேரத்தை விளித்திருந்து பார்த்தாலும் போட்டி நிறைவில் மனதுக்கு ஓர் ஆறுதலை உதைப்பந்தாட்டப் போட்டிகள் வழங்குவதை மறக்க முடியாது.

இன்று புதன்கிழமை உலக மக்களின் ஓர் சாராரை மிகிழ்ச்சிப்படுத்தும் போட்டியாகவும் இன்னுமொரு சாராரை அழவைக்கும் போட்டியாகவும் நிச்சயமாக இப்போட்டி அமையப்போகின்றது. இரு முறை ஐரோப்பா கிண்ணத்தை வெற்றி பெற்ற அணியாகவும் ஒரே ஒரு முறை (2010) உலகக் கிண்ணத்தை வென்ற அணியாகவும் இருக்கும் நடப்பு உலகச் சம்பயனான ஸ்பெய்னை எதிர்த்து போர்த்துக்கல், யுக்ரைன் ‘டொனஸ்ட்’  உதைப்பந்தாட்ட மைதானத்தில் இன்ற மாலை சந்திக்கின்றது. போர்த்துக்கல் 2004ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தது. எனினும் இறுதிநேரத்தில் கிறீஸ் வெற்றி பெற்றிருந்ததும் தெரிந்தவிடயம்.

எந்தவொரு இரசிகர்களை எடுத்தாலும் ‘நிச்சயமாக ஸ்பெய்ன்தான் வெற்றிபெறும்’ என உறுதியாகக் கூறுகின்றனர். எனினும் ‘ஓர் புதிய அணி கிண்ணத்தை வெல்லட்டும்’ என்றும் இணையங்களில் கருத்துக் கணிப்புக்கள் குவிந்தவண்ணமிருக்கின்றன.

போர்த்துக்கல் அணிக்கு ஐரோப்பா நாடுகளில் எதிர்ப்பலைகள் இருக்கின்றன. குறிப்பாக தோல்வியைத்தழுவிய பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து போன்ற பெரும் நாடுகள் ஐரோப்பாவில் உதைப்பந்தாட்டத்தால் மாத்திரம் பிரசித்திபெற்று விளங்கும் போர்த்துக்களுக்கு ஆதரவு அளிப்பதில்அந்த நாட்டு இரசிகர்கள் விரும்புவதில்லை! எனினும் உலகநாடுகளின் அனுதாப ஆதரவுகள் போர்த்துக்களுக்கு இருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற வீரர்களான ரொனால்டோ, நானி போன்ற வீரர்களைக் கொண்டமைந்த போர்த்துக்கள் அதிக பலம்வாய்ந்த ஸ்பெய்னை எந்தளவு எதிர்த்தாடும் என்பது உண்மையில் கேள்விக்குரியதே.

மைதானத்தில் 11 வீரர்களைக் கொண்டு ஸ்பெய்ன் விளையாடுவது 15 வீரர்களுக்கு சமமானதாக இருக்கும். ஏனெனில் வீரர்களின் பலம், வியூகம், வேகம் இவை ஸ்பெய்னுக்குரிய ஓர் தனிச் சிறப்பம்சமாகும் . உலக புகழ்பெற்ற கழகங்களில் அங்கம்பெறும் பல வீரர்கள் இவ்வணியில் இருப்பதால் வெற்றிபெறுவது என்பது ஸ்பெய்னுக்கு உறுதியே!

போர்த்துக்கல் வெற்றிபெற்றா ல் நிச்சயமாக உலக மக்களின் அனுதாப ஆதரவுடன் மிளிரும்.

Published by

Leave a comment