மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளுக்கான அரசாங்க நியமனங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில்வாய்புக்காக விண்ணப்பித்திருந்த 2,265 பட்டதாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேர்முகப்பரீட்சைகள் நடைபெற்றன.
01.6.2004 தொடக்கம் 31.12.2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பட்டப்படிப்பை முடித்த 1,350 பட்டதாரிகளுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
இவர்களுக்கான நியமனக்கடிதங்களை பெற்றுக்கொள்வதற்கான கடிதங்கள் தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
-tamilmirror
Leave a comment