சிரேஷ்ட கலைஞர்களுக்கு வாகனம் கொள்வனவிற்காக வட்டியில்லா கடன் பெற்றுக்கொடுப்பதற்கு விண்ணப்பப்படிவங்கள் அடுத்த மாதம் தொடக்கம் கலை மற்றும் கலாசார அமைச்சினால் கோரப்படவுள்ளன.
கலைஞர்களுக்கு ரூபா 12 இலட்சத்தினை வட்டியில்லா கடனாக வழங்கத்தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் 18 வருடங்களுக்கு மேல்கலைத்துறையில் உள்ள கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது .
கவிஞர்கள் எழுத்தாளர்கள் கலை இசை நடன பொம்மலாட்ட நாடக தயாரிப்பாளர்கள் ஓவிய சிற்ப புகைப்படபிடிப்பாளர் தொலைக்காட்சித் ஆகிய துறைகளில் உள்ள கலைஞர்களுக்கு இக்கடனுதவி வழங்கப்படவுள்ளது.
இக்கடன் திட்டம் நடைமுறைப்படுத்தல் விடயமாக விசேட கலந்துரையாடலொன்று அன்மையில் கலை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க தலைமையில்
பாராளுமன்ற உறுப்பினர் மாலனி பொன்சேகா மற்றும் அமைச்சின் செயலாளர் விமல் ரூபசிங்க கலாசாரஅலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் விஜித் கணுகலஆகியோருடன் பல கலைஞர்கள்
பங்குபற்றலுடன் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
-அரசாங்க தகவல் ஊடகம்
Leave a comment