இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்போட்டி காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம் பெற்றது. 4வது நாளான நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை 209 ஓட்ட வித்தியாசத்தில் பாரிய வெற்றியை இலங்கை பெற்றிருந்தது.
இதற்கு முன் 2009 ஜூலை மாதம் இலங்கையில் இடம்பெற்ற இரு அணிகளுக்கிடையிலுமான 3 போட்டிகள் கொன்ட டெஸ்ட் தொடரை 2:0 என்ற ரீதியில் இலங்கை தொடரைக் கைப்பற்றி இருந்தது. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்திருந்தது. சுமார் 3 வருடங்களின் பின் பாகிஸ்தானை டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை வெற்றி பெற்றிருக்கின்றது. குமார் சங்கக்கார ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
புதிய பயிற்றுவிப்பாளரான டேவிட் வட்மோரைக் கொண்டு சுற்றுலா வந்த பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை இழந்திருக்கின்றது. டெஸ்ட் தொடரும் பறிபோகும் நிலையிலேயே இருப்பதாக பாகிஸ்தானின் ஊடகங்கள் பாகிஸ்தானை விமர்சித்திருக்கும் இந்நிலையில், வட்மோருக்கும் அழுத்தங்கள் வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அணி பாகிஸ்தானை மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டி இருப்பது இது முதல்தடவையாகும். இதேபோல் இலங்கையை பாகிஸ்தான் 222 ஓட்டங்களால் பெரு வெற்றி பெற்றிருந்தது. மார்ச், 2000, கராச்சி தேசிய மைதானத்தில் இடம்பெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்ந வெற்றியை பாகிஸ்தான் பெற்றிருந்தது.
சகலதுறை ஆட்டக்காரர்களை அதிகளவு உள்ளடக்கிய இலங்கை அணி மென் மேலும் வெற்றிகளைப் பெறும் என்பதையே இலங்கை மக்கள் மாத்திரமல்ல உலக இரசிகர்களும் இணையத்தளங்களில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்திருக்கும் நிலையில், தொடரை சமப்படுத்துவதற்காகவாவது பாகிஸ்தான் புத்துணர்ச்சியுடன் மீண்டும் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
![146777[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/1467771.jpg?w=232&h=300)
Leave a comment