T20 முக்கோணத் தொடர்: சிம்பாப்வே சரித்திர வெற்றி!

-MJ

சிம்பாப்வேயில் கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று வந்த சிம்பாப்வே, பங்களாதேஷ, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் கலந்துகொண்ட முக்கோண இருபது20 தொடரில் சிம்பாப்வே 9 விக்கட்டுக்களால் தென்னாபிரிக்காவைத் தோற்கடித்து தொடர் சம்பியனாகவும் வெற்றிபெற்று, சிம்பாப்வே கிரிக்கட்டில் ஓர் வரலாற்று வெற்றியைப் படைத்திருக்கின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ‘ஹராரே’ இல் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 6 விக்கட்டுக்கள் இழப்புக்கு 146 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ‘பிளசிஸ்’ 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 1 விக்கட்டை மாத்திரம் இழந்து 17.1 ஓவர்களில் 147 எனும் வெற்றி இலக்கைப் பெற்று வெற்றியீட்டியது. சிம்பாபேயின் வெற்றிக்கு ‘மஸாகட்சா’ ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும், டய்லர் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும் பெற்று ஓர் சுற்றுப் போட்டிக்கான சரித்திரத்தைப் படைத்திருக்கின்றனர்.

ஆட்டநாயகனாக டய்லரும், சுற்றுப்போட்டியின் ஆட்ட நாயகனாக மஸாகட்சாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

Published by

Leave a comment