மன்னாரில் அண்மைக்காலமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்டுவரும் இடைவெளியை சீர்செய்யும் நோக்கில் மன்னார் ஆயர் பேரருட் திரு இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் முஸ்லிம் சமய, சமூகத் தலைவர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ், முஸ்லிம் மக்களுக்கி டையில் நட்புறவையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் ஆரம்ப கட்ட முயற்சியாக இந்த சந்திப்பு அமைந்ததுடன் மன்னார் ஆயரில்லத் தில் நடந்த இச் சந்திப் பினை மன்னார் சர்வ மதப் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.
இச்சந்திப்பு தொடர் பாக மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் கருத் துத் தெரிவிக்கையில்;
இச்சந்திப்பு சுமுகமானதாகவும் சினேக பூர்வமானதாகவும் அமைந்ததோடு பரஸ் பரம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும், மன ஆதங்கங்களை வெளிப்படுத்தவும் சிறந்த களமாக அமைந்திருந்தது எனவும் குறிப்பிட்டார்.
இச்சந்திப்புத் தொடர்பாக தமிழ் நேசன் அடிகளார் மேலும் தெரிவித்ததாவது;
மன்னாரில் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த மக்கள் மன்னாரில் இனங்களுக் கிடையில், மதங்களுக்கிடையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை குறித்து மிகுந்த வேதனை கொண்டுள்ளனர்.
இம்முறுகல் நிலையை மேலும் வளரவிடாமல் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரை சந்திக்க வைத்து பிரச்சினை களைப் பேசித் தீர்க்க வழிசெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தனர். அதுமட்டுமல்ல மன்னாருக்கு வெளியே உள்ள நல்மனம் கொண்ட பல தரப்பினரும் இந்த நிலைமை தொடர்பாக தங்கள் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவேதான் மக்களின் இந்த உணர்வு களைப் புரிந்துகொண்டு மன்னாரில் இன, மத நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையாக இச் சந்திப்பை மன்னார் சர்வமதப் பேரவை ஏற்பாடு செய்தது. மீள் குடியேற்றம் வேலைவாய்ப்பு போன்றவற்றில் சட்ட ஒழுங்குவிதிகளுக்கு முரணாக நடந்த பாரபட்சங்களை மன்னார் ஆயர் எடுத்து விளக்கினார். அதேபோன்று முஸ்லிம் சமய, சமூகத்தலைவர்களும் தாம் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் அவசரமாக தீர்க்கப் படவேண்டிய சில பிரச்சினைகள் தொடர் பாகவும் தங்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர்.
இச்சந்திப்பு முதற் கட்ட சந்திப்பாக அமைந்தது. எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். அடுத்த கட்ட சந்திப்பில் அமைச்சர் றிசாட் பதியுதீனையும் அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
மன்னாரில் இன, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த மன்னார் சர்வமதப் பேரவை தொடர்ந்து தன்னை அர்ப்பணித்து செயற்படும் என தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின்போது மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் விக்ரர் சோசை அடிகளார். மன்னார் இந்துக் குருமார் பேரவையின் தலைவர் மனோகர ஐங்கர சர்மா, செயலாளர் ம. தர்மகுமாரசர்மா குருக்கள், பொறியியலாளர் ச. இராம கிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர். இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் மன்னார் கிளைத் தலைவரும் மன்னார் சர்வமதப் பேரவையின் இணைத் தலைவர் களில் ஒருவருமான மெளலவி எஸ். ஏ. அkம், மன்னார் முஸ்லிம் சமய, சமூகத் தலைவர்களின் குழுவுக்கு தலைமை வகித்தார்.
-தினகரன்
Leave a comment