எகிப்தின் புதிய ஜனாதிபதியாக முகமட் மொர்சி தெரிவு

-MJ

அளிக்கப்பட்ட வாக்குகள் :              26,420,763 (51 per cent)

செல்லுபடியாகாத வாக்குகள்:     843,252

முகமட் மொர்சி :                                 13,230,131வாக்குகள் (51.7 per cent )

அகமட் சபிக்:                                          12,347,380 வாக்குகள்

எகிப்தின் புதிய ஜனாதிபதியாக எகிப்து சகோதரத்துவக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட முகமட் மொர்சி வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அளிக்கப்பட்ட 26 மில்லியன் வாக்குகளில் 13.2 மில்லியன் வாக்குகளைப் பெற்று, 51 வீத அதிகப்படியான வாக்குகளின் அடிப்படையில் வெற்றிபெற்று எகிப்தின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.

இரண்டாமிடத்தில் முன்னாள் பிரதமரான அகமட் சபிக் 12.3 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருக்கிறார். 8 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்பட்ட அல்லது செல்லுபடியாகாத வாக்குகளாக இருந்ததாகவும் எகிப்தின் தேர்தல் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் மொகமட் மொர்சியின் வெற்றியை அடுத்து அவரது ஆதரவாளர்கள் ஊர்வலங்களை எடுத்து வருகின்றனர். ‘அல்லாஹ் அக்பர்’  ‘இராணுவ ஆட்சி ஒழிக’, போன்ற  கோசங்கள் ஆதரவாளர்களால் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் மொர்சியின் வெற்றிச் செய்தி அறிந்து துருக்கி,  ஐக்கிய அரபு இராச்சியம் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.

Published by

Leave a comment