SAMSUNG GALAXY SIII இலங்கையில் அறிமுகம்

டிஜிடல் ஊடகம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிடல் தொழில்நுட்பத்தில் சர்வதேச முனைவர்களாக விளங்கும் சம்சங் எலக்ட்ரோனிக்ஸ் கம்பனி லிமிடட் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கலக்ஸி SIII இனை இலங்கைச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இயற்கையினால் தூண்டப்பட்டு மனிதர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கலக்ஸி SIII  ஸ்மார்ட்போன், உங்கள் குரலை அடையாளம் கண்டு, எண்ணங்களைப் புரிந்துகொண்டு, ஒரு கணத்தில் உடனடியாகவும், இலகுவாகவும் பகிர்ந்து கொள்வதற்கு வழியமைக்கின்றது.

இந்த புத்தமைவு மற்றும் நேர்த்தியான தோற்றம் கொண்ட ஸ்மார்ட் போன் நாளாந்த வாழ்க்கையினை இலகுவாக்கும் வகையில் மேலதிக சாமர்த்தியத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. சம்சங் கலக்ஸி SIII இன் 4.8 அங்குல HD சுப்பர் அமோல் செய்யப்பட்ட காட்சித்திரையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளடக்கங்களை மிகச்சிறப்பாக காணமுடியும். 8MP கமரா மற்றும் 1.9 MP முன்புற கமரா ஆகியன சாதூர்யமான கமரா சிறப்பம்சங்களையும், முகத்தோற்றத்தினை உணர்ந்து செயற்படும் தெரிவுகளையும் உள்ளடக்கியிருப்பதால், அனைத்து மறக்க முடியாத தருணங்களையும் இலகுவாகவும் உடனடியாகவும் கைப்பற்றுவதற்கு உதவுகின்றது. சம்சங் கலக்ஸி SIII ஆனது அன்ட்ரோயிட் TM 4.0 ஐஸ்க்aம் சன்ட்விச் இனால் வலுவூட்டப்பட்டுள்ளதன் மூலம், உபயோகிப்போருக்கு மேம்படுத்தப்பட்ட பாவனை வசதியினை வழங்கி, அதனை இலகுவாக்குகின்றது. இயலுனர் தொழில்நுட்பத்தினால் மேம்படுத்தப்பட்டுள்ள சம்சங் கலக்ஸி ஷியியியி ஆனது தனித்துவமான மொபைல் அனுபவத்தினை பாவனையாளர்களுக்கு எதுவித சிரமமுமின்றி வழங்குகின்றது.

கலக்ஸி SIII ஆனது சாதனத்திற்கும் பாவனையாளருக்கும் இடையிலான ஊடாடலை மேம்படுத்துகின்றது. உங்கள் முகம், குரல் மற்றும் அசைவுகளை கண்டறிந்து கொள்ளும் சம்சுங் கலக்சி பாவனையாளருக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்று செளகர்யமானதும் இலகுவானதுமான பாவனை அனுபவத்தினை உபயோகிப்பவருக்கு வழங்குகின்றது. புத்தமைவு ‘ஸ்மார்ட் ஸ்டே’ சிறப்பம்சம் ஊடாக சம்சங் கலக்ஸி SIII ஆனது நீங்கள் எவ்வாறு உங்கள் மொபைல் தொலைபேசியை உபயோகிக்கின்aர்கள், மின்புத்தகம் ஒன்றை எவ்வாறு வாசிக்கின்aர்கள், அல்லது இணையத்தினை எவ்வாறு பார்க்கின்aர்கள் என்பதனை முன்புற கமராவினால், உங்கள் கண் அசைவுகளை கவனிப்பதன் மூலம் கண்டுணர்ந்து கொள்வதுடன், மிகச்சிறந்த தொடர்ச்சியான உபயோகத்திற்காக பிரகாசமான காட்சித்திரையினைப் பேணுகின்றது.

சம்சங்க கலக்ஸி SIII ‘S Voice’ ஆனது, உங்கள் சொற்களைக் கேட்டு பதிலளிக்கும் வகையிலான மேம்படுத்தப்பட்ட இயல்பான தொழில் பாவனையாளர் இடைமுக சிறப்பம்சத்தை வெளிப்படுத்துகின்றது. இதற்கு மேலதிகமாக தகவல் தேடல் மற்றும் அடிப்படை சாதனம் பாவனையாளர் தொடர்பாடலை அனுமதிக்கும் ‘S Voice’ ஆனது சாதனத்தைக் கட்டுப்படுத்தல் மற்றும் கட்டளைகள் தொடர்பில் திறன்மிக்க செயற்பாடுகளைக் கொண்டுள்ளது.

4.8’HD சுப்பர் அமோல் செய்யப்பட்ட காட்சித்திரை, மூலம் கலக்சி SIII மிகப்பெரிய காட்சித்திரை அனுபவத்தை வழங்குகின்றது. சம்சங் மொபைலின் சுப்பர் அமோல் செய்யப்பட்ட காட்சித்திரையானது HD இற்கு மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் 16:9 என்ற ரீதியிலான அகல நோக்கு கோணங்களை வழங்குகின்றது. துரிதமான உள்ளடக்க பகிர்வுகள் மற்றும் இணைவு ஆகியவற்றை உறுதிசெய்யும் சம்சங் கலக்ஸி SIII இரண்டு மடங்கு தீi-பிi பட்டையகலத்தை வழங்கும் தீi-பிi சனெல் பொண்டிங் இனையும் அளிக்கின்றது.

சம்சங் கலக்ஸி SIII முற்றிலும் புதிய வழிமுறைகளில் செயற்திறனை அதிகரிக்கும் வகையிலான மேலதிக சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. வேறு வேலைகளை செய்து கொண்டிருக்கும் அதேநேரம், காட்சித் திரையின் ஓரத்தில் வீடியோவினை செயற்படவிடும் ‘Pop up play’ இனை சம்சங் கல்கஸி SIII அறிமுகப்படுத்துகின்றது. இதன்மூலம், நீங்கள் மின்னஞ்சல்களை பார்வையிடும் போது அல்லது இணையத்தளத்தை பார்வையிடும் போது அவற்றினை நிறுத்தி வீடியோவினை செயற்படுத்துவதற்கான தேவையை இல்லாதொழித்து ஒரேநேரத்தில் இரண்டையும் செயற்படுத்துவதற்கு வழியமைக்கின்றது.

-தினகரன்

Published by

Leave a comment