
கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி மத்திய கிழக்கு நாடுகளுக்கான வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நேர்முகப்பரீட்சை நேற்று மட்டக்களப்பு கச்சேரியிலுள்ள மீள்குடியேற்ற அமைச்சின் மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளுக்கிணங்க சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான அலுவலகத்தினால் நடத்தப்பட்ட இவ் வேலைவாய்ப்புகளுக்கான நேர்முகப்பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பெருந்தொகையான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வேலையற்ற இளைஞர்களுக்கு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய இந்த நேர்முகப்பரீட்சை நடைபெறுகிறது.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் திருமலை மாவட்ட ஆரம்ப அமைப்பாளர் எஸ்.எச்.சோமபாலவின் புதல்வர் எஸ்.எச்.கிருஷேன்குமார், மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் திருமதி ருத்திரமலர் ஞானபாஸ்கரன், மீள்குடியேற்ற அமைச்சின் ஊடக இணைப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் இந்த நேர்முகப்பரீட்சையை நடத்தினார்.
நாடு பூராகவும் 2000 பேரை வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு சேர்த்துக் கொள்ளும் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் யுத்தம் மற்றம் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை உள்வாங்கும் அடிப்படையில் இவ் நேர்முகப்பரீட்சை நடத்தப்படுவதாக எஸ்.எச்.கிருஷேன்குமார் தெரிவித்தார்.
-adaderana
Leave a comment