நேற்றிரவு இடம்பெற்ற ஐரோப்ப கிண்ணத்துக்கான 3வது கால் இறுதிப் போட்டியில் 2:0 எனும் கோல் வித்தியாசத்தில் பிரான்ஸ் அணியை வெற்றி கொண்ட ஸ்பெய்ன் அணி, எதிர்வரும் 27ம் திகதி புதன்கிழமை இரவு போர்த்துக்கல் அணியுடன் முதலாவது அரை இறுதிப் போட்டியில் மோதுகின்றது.
நேற்றைய போட்டியின் முதல் 45 நிமிடங்களில் ஸ்பெய்ன் வீரர்களின் செல்வாக்கே போட்டியை ஆக்கிரமித்திருந்தது. ஸ்பெய்ன் போட்ட முதலாவது கோலுடன் பிரான்ஸ் வீரர்களின் மனநிலை சோர்ந்து போனதை போட்டியைக் கண்டு இரசித்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். அசைக்கமுடியாத பார்சிலோனா, ரியல் மெட்ரிட் கழக வீரர்களை கொண்டு தனிச்சிறப்பைக் கொண்டமைந்த ஸ்பெய்ன் தனது செல்வாக்கை மீண்டும் தக்கவைத்துள்ளது.
பிரான்ஸ் சார்பாக ரிபேரியைத் தவிர பென்சிமா, நஸ்ரி, மலூடா போன்றோரின் ஆட்டம் பிரகாசிக்கவில்லை.
![Euro-2012-Spain-France-Spain-full-time-celeb_2785133[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/euro-2012-spain-france-spain-full-time-celeb_27851331.jpg?w=300&h=225)
Leave a comment