இரண்டரை மணித்தியால போராட்டத்தின்பின் இத்தாலி வெற்றி!

-MJ

ஐரோப்பா கிண்ணத்துக்கான கால் இறுதிப் போட்டியின் பிரபலமான  இறுதி போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இம்முறைக்கான ஐரோப்பா கிண்ண ‘நொக்க அவுட் லீக்’  தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியே 3வது சுற்றுக்குச் சென்று முடிவை எட்டி இருந்தது.

ஆம்! இங்கிலாந்து – இத்தாலி அணிகள் பலத்த பலப்பரீட்சையில் அரை இறுதி தெரிவுக்கான போட்டியில் விளையாடின. முதல் 90 நிமிடங்களில் போட்டியின் முடிவு கிடைக்காததால், மேலதிக நேரமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. எனினும் மேலதிக 30 நிமிடங்களிலும் முடிவு கிடைக்காததால் மூன்றாவது படி முறைக்கு போட்டி சென்றது. 0:0 என்ற முடிவில் இரு அணிகளும் பெனால்டி உதைமுறைக்குச் சென்றன.

இங்கிலாந்து வீரர்கள் அடித்திருந்த பந்துகளில் ஒன்று கோல் காப்பாளரிடம் சென்றது. மற்றையது கோல் கம்பத்தில் பட்டுத் தவறியது. இத்தாலி வீரர் ஒருவரின் பெனால்டி வெளியே சென்று தவறி இருந்தது. எனினும் பெனால்டி உதைகளில் 4:2 என்ற கோல் வித்தியாசத்தில் இத்தாலி வெற்றியீட்டியது. பல பில்லியன் மக்கள் கண்டுகளித்த இப்போட்டியில் இங்கிலாந்து பரிதாபகரமாக தோல்வியைத் தழுவி வெளியேறியது.

முதல் 90 நிமிட ஆட்டத்திலும் அதன் பின்னரான 30 நிமிட ஆட்டத்திலும் இத்தாலியின் பலம் ஓங்கி இருந்ததைக் காண முடிந்தது. எனினும் பலத்த போட்டிகள் இரு அணிகளுக்குமிடையில் இருந்ததும் விசேட அமசமாகும்.

இம்முறைக்கான ஐரோப்பாக் கிண்ணப் போட்டிகள் நிறைவுக்கட்டத்திற்கு வருகின்றது. இதன்படி எதிர்வரும் புதன்கிழமை போர்த்துக்கல்-ஸ்பெய்ன அணிகளும், வியாழக்கிழமை ஜேர்மனி-இத்தாலி அணிகளும் அரை இறுதியில் விளையாட இருக்கின்றன. ஜூலை முதலாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி இடம்பெற இருப்பதும் அறியத்தக்கது.

Published by

Leave a comment