அஸ்வருக்கு கொலை மிரட்டல்; பிரதான சந்தேக நபர் C.I.D வசம்!

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வருக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரதான சந்தேக நபரை சி.ஐ.டி பொலிஸார் பேருவளை தர்கா நகரில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

அரசியலிலிருந்து ஒதுங்குமாறும், முஸ்லிம் விவகாரங்களில் தேவையற்ற விதமாக தலையிட வேண்டாமெனவும் கூறிச் சில அநாமதேய தொலைபேசி அழைப்புகள் அஸ்வர் எம்.பியின் கைபேசிக்கு வந்ததைத் தொடர்ந்து அவர் பொலிஸாரிடம் முறையிட்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிலரே இவ்வாறு செயற்படுவதாகவும், இது அவர்களது வங்குரோத்து அரசியலை எடுத்துக்காட்டுவதாகவும் அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.

-தினகரன்

Published by

Leave a comment