சிம்பாபே இல் நடைபெற்றுவரும் சிம்பாபே, பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் இருபது20 முக்கோண தொடரில், இன்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி தென் ஆபிரிக்கா அணியை 3 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா இருபது ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்புக்கு 129 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19.5 ஓவர்களில் 7 விக்கட் இழப்புக்கு 132 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கட்டுக்களால் தென்னாபிரிக்காவை வெற்றிகொன்டுள்ளது. பங்களாதேஷ் சார்பாக அதிகபட்ச 40 ஓட்டத்தை முகமட் அஷ்ரபுல் பெற்றுக் கொடுத்தார்.

Leave a comment