இன்றிரவு நடைபெற்று முடிந்த ஐரோப்பா கிண்ணத்துக்கான 2வது கால் இறுதிப் போட்டியில் ஜெர்மனி, கிறீஸ் அணிகள் மோதின. முதல் 45 நிமிட நேரத்தில் 1:0 என ஜேர்மனி முன்னிலையில் இருந்தது. போட்டி நிறைவடையும் போது 4:2 கோல் அடிப்படையில் ஜேர்மனி பெரு வெற்றி பெற்று தனது பலத்தை ஏனைய நாடுகளுக்கு மீண்டும் தெரியப்படுத்தி இருக்கின்றது.
ஐரோப்பாவின் முன்னணிக் கழகங்களில் விளையாடும் சிறந்த இளம் வீரர்களைக் கொண்டமைந்த ஜெர்மனி, ஆரம்பம் முதல் சிறப்பாகவே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய ஆட்டத்தில் வெற்றியீட்டிய போர்த்துக்கல், நாளை இடம்பெறும் மற்றுமொரு முக்கிய போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் அரை இறுதியில் மோதும். நாளை நடப்பு உலகக் கிண்ணச் சம்பியனும் 2008 ஐரோப்பாக் கிண்ண சம்பியனுமான ஸ்பெயினை எதிர்த்து பிரான்ஸ் மோத இருக்கின்றது.
நாளை மறு தினம் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து, இத்தாலி அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இன்று வெற்றிபெற்ற ஜேர்மனியுடன் அரை இறுதிப் போட்டியில் சந்திக்கும். இறுதிவரை விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கும் ஐரோப்பாக் கிண்ணத்துக்கு வர்ணிப்பதற்கு வார்த்ததைகள் போதாது!
![Philipp-Lahm-Germany-Greece-Euro-2012-Quarter_2784538[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/philipp-lahm-germany-greece-euro-2012-quarter_27845381.jpg?w=300&h=225)
Leave a comment