இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் ஆரம்பமாகிறது. பாகிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் தொடர் நாயகன் விருதைப் பெற்ற திஸ்ஸர பெரேராவுக்கும் இத்தொடரில் சிறப்பாகப் பிரகாசித்த நுவான் குலசேகர மற்றும் ஜீவன் மென்டிஸ் ஆகியோருக்கும் இந்த டெஸ்ட் தொடரில் வாய்ப்ளிக்கப்பட்டிருக்கின்றமை ஓர் விசேட அம்சமாகும்.
கடந்த 18ம் திகதி இடம்பெற்ற 5வது ஒருநாள் சர்வதேச போட்டியில் தாமதமாக தங்களது அணி பந்து வீசிய குற்றத்திற்காக பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பாஉல் ஹக் இற்கு முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் அணியின் தலைவராகத் தொடர்ச்சியாகப் பதினைந்த டெஸ்ட் போட்டிகளில் அணித்தலைவராகப் பணியாற்றியிருந்த மிஸ்பாஉல் ஹக் 23 போட்டிகளில் தலைவராகக் கடமையாற் றிருந்த அப்துல் காதரின் பாகிஸ்தான் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை இதன் மூலம் இழந்துள்ளார்.
இலங்கை-பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டி ஒன்றில் முதன் முதலாக மார்ச் மாதம் , 5ம் திகதி 1982ல் பாகிஸ்தான் கராசச்சி-தேசிய மைதானத்தில் சந்தித்தன. 3 போட்டிகள் கொண்டதாக அமைந்த இத்தொடரில் பாகிஸ்தான் இலங்கையை 2:0 எனும் அடிப்படையில் வெற்றியீட்டியது. ஒரு (இரண்டாவது) போட்டி சம நிலையில் முடிந்திருந்தது .
அப்போதெல்லாம் தொடர்ந்து 3 நாட்கள் விளையாடப்படும். பின்னர் ஒரு நாள் (4வது நாள்) ஓய்வு நாளாக வழங்கப்படும். அதன்பின்னர் மீதமுள்ள 2 நாட்களும் விளையாடப்படும். தாங்க முடியல்ல!
இதேபோல் இறுதியாக இரு அணிகளும் 2011, ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம் பெற்ற டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தன. 3 போட்டிகள் கொன்டதாக அமைந்த இத்தொடரையும் பாகிஸ்தான் 1:0 எனும் ரீதியில் வெற்றி பெற்றிருந்தது. அதாவது 1 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்ததும், 2 போட்டிகள் சம நிலையில் முடிவடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கின்றன. அவற்றுள் பாகிஸ்தான் 16 போட்டிகளிலும் இலங்கை 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. இவற்றுள் 15 போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி அல்லது சம நிலையில் முடிவடைந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
![Pak-Slka-Flgs by pakistan defence news blog[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/pak-slka-flgs-by-pakistan-defence-news-blog1.gif?w=300&h=148)
Leave a comment