-MJ
உதைப்பந்தாட்டப் போட்டிகள் எவ்வளவுதான் தொழிநுட்ப முன்னேற்றங்களுக்கு மத்தியில் நடாத்தப்பட்டாலும் சில போட்டிகள் விமர்சனங்களில் முடிவடைகின்றன. அதேபோல் போட்டியின் முடிவுகளும் மாறிவிடுவதும் வேதனைக்குரியதாகும்.
தற்பொழு நடைபெற்றுவரும் ஐரோப்பா கிண்ணப் போட்டிகள் உலக உதைப்பந்தாட்ட இரசிகர்களை மகிழ்வித்துச் செல்லும் ஓர் திருவிழாவாகவே அமைந்து செல்கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற குழு’ டி’ யிற்கான இங்கிலாந்து-யுக்ரைன் அணிகளுக்கிடையிலான மிக முக்கிய போட்டியில் இங்கிலாந்து வெற்றியீட்டியிருந்தது. எனினும் யுக்ரைன் சார்பாக வழங்கப்பட்ட கோல் (?) , கோல்கம்பத்துக்குள் சென்று, அதனை இங்கிலாந்து அணித்தலைவர் ‘டெரி’ அபாராமாக வெளியே அடிக்கின்றார். எனினும் பல முனைகளில் இதன் கானொளிகளை பார்க்கும் போது கோல் என்பது உறுதியாகிறது.
சமநிலையில் முடிவடையவேண்டிய இப்போட்டியில் யுக்ரைன் தோல்வியடைந்தது. இப்போட்டியின் முடிவு பற்றி இங்கிலாந்து பத்திரிகைகள் உட்பட உலக நாடுகள் யுக்ரைனால் அடிக்கப்பட்டது கோல் என்பதாகவே எழுதிவருகின்றன.
வழமையாக ஒரு பிரதான மத்தியஸ்தரும் இரு எல்லை மத்தியஸ்தர்களுமே உமைப்பந்தாட்டப் போட்டிகளில் நடுவர்களாக செயற்படுவது வழக்கம். ஆனால் இவ்வாறான விமர்சனங்களைத் தடுப்பதற்காக மேலதிகமாக இரு உப மத்தியஸ்தர்கள் இரு அணியினதும் கோல் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். அப்படி இருந்தும் கணிப்புகள் தவறிவிடுகின்றன.
கடந்த உலகக் கிண்ண கால் இறுதிப்போட்டியில் ஜேர்மனிக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ‘ஜெராட்’ அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு உள்ளே சென்றது. எனினும் அது மத்தியஸ்தரால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதேபோல் 2010 உலகக்கிண்ணத்துக்கான தகுதி போட்டியில் பிரான்ஸ்-அயர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் பிராஸ்ன் வீரர் ‘ஹென்ரி’ ஒரு கோலை வழங்கி இருந்தார். ஆனால் அது இவரது கையில் பட்டு கோல் கம்பத்துக்குள் சென்றது நிரூபிக்கப்பட்டது. எனினும் உலகக்கிண்ணப் போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பை அயர்லாந்து இழந்திருந்ததும் விமர்சனத்துக்குரியதாக அமைந்தது.
என்னதான் தொழிநுட்பத்திற்கிடையில் இப்போட்டிகள் இடம்டிபற்றாலும் கண் இமைப்பதற்குள் பல மாற்றங்கள் இடம்பெற்றுவிடுகின்றன. இதனால் இன்றுவரை பல விமர்சனங்கள் வந்தவன்னமே இருக்கின்றன. முக்கியமாக கோல் எல்லை தொழிநுட்பம் (Goal Line Technology) மென்மேலும் அவதானிக்கப்பட இருப்தாக FIFA அறிவித்திருக்கிறது.
கனநேரத்துக்குள் பிரதான மத்தியஸ்தரின் கணிப்பே போட்டியின் முடிவாக மாறுவதால் பல சிக்கல்களை மென்மேலும் உதைப்பந்தாட்டம் சந்திக்க இருக்கின்றது என்பது கவலைக்குரியதே!

Leave a comment