நேற்றிரவு இடம்பெற்ற ஐரோப்பா கிண்ண கால் இறுதிப் போட்டிக்கான முதலாவது போட்டியில் போர்த்துக்களும் செக் குடியரசும் விளையாடின. முதல் 45 நிமிட ஆட்டத்தில் 0:0 என சமநிலையில் இருந்த போட்டி, இரண்டாவது ஆட்டத்தில் போர்த்துக்கல் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ‘ரொனால்டோ’ வின் கோலினால் இப்போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி இருக்கின்றது.
இன்று இரவு இடம்பெறும் 2வது கால் இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மனியை எதிர்த்து 2004 ஐரோப்பா சம்பியனான கிறீஸ் மோத இருக்கின்றது. கடந்த 3 போட்டிகளிலும் கிறீஸ் நாட்டின் வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்றும் அதிகமான வீரர்கள் தங்களது நாட்டில் இடம்பெற்று வந்த தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதிலேயே கவனம் செலுத்தியதாகவும் கிறீஸ் அணியின் பயிற்றுவிப்பாளர்களும் அதிகாரிகளும் குற்றம் சுமத்தி இருந்தனர். எனினும் தாங்கள் சிறப்பாக விளையாடியதாகவும் அதனால்தான் கால் இறுதிக்கு தங்களால் வரமுடிந்தது எனவும் கிறீஸ் வீரர்கள் மறுத்துக் கூறி இருக்கின்றனர்.
போட்டியின்போது மிக ஆக்ரோசமாக கிறீஸ் வீரர்கள் விளையாடுவதும் போட்டி விதிகளை மீறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஒரு போட்டியில் குறைந்தது 4 வீரர்களாவது மஞ்சல் அட்டை எச்சரிக்கைக்கு உட்பட்டு வருவதும் அவதானிக்கத்தக்கது.
ஜேர்மனியைப் பற்றி கூறவேண்டியதில்லை. பலம் பொருந்திய அணியாகவும் உலகின் பல முன்னணிக் கழகங்களில் விளையாடும் வீரர்களைக் கொண்டதாகவும் அமைந்த ஜேர்மனிக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக விளையாட்டு ஆய்வாளர்கள் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.
![Czech-Republic-v-Portugal-Cristiano-Ronaldo-r_2784094[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/czech-republic-v-portugal-cristiano-ronaldo-r_27840941.jpg?w=530&h=397)
Leave a comment