மட்டக்களப்பு மாவடத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி ஜோர்தானுக்கு வேலைவாய்ப்பு வங்குவதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்பு தாண்டவன் வெளியில் நடைபெறவுள்ளது.
தாண்டவன்வெளி திருமலை வீதி இலக்கம் 204ல் காணிக்கை மாதா ஆலயத்தின் முன்பாக இவ் நேர்முகப்பரீட்சைகள் நடைபெறும்.
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரனின் வேண்டுகோளுக்கிணங்க நடைபெறும் இவ் வேலைவாய்ப்புகளுக்கான நேர்முகப்பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர்கள் அனைவரையும் கலந்து
கொள்ளுமாறு மீள்குடியேற்ற பிரதி அமைச்சின் ஊடக இணைப்பாளர் ஜீவானந்தம் தெரிவித்தார்.
இவ் நேர்முகப் பரீட்சைக்கு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகளுடன் சமூகமளிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ் நேர்முகப்பரீட்சை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை முழுநாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-adaderana
Leave a comment