யாழ். காரைநகரில் இரும்பு வாங்கச் சென்ற முஸ்லிம்கள், வலுவிழந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பாக குரல் கொடுத்து வந்த மகளிர் அமைப்புகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் முஸ்லிம் அமைப்புகள் ஈடுபடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
கடந்த மாதம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரண்டு முஸ்லிம் நபர்கள் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர். அத்தோடு பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இது தொடர்பாக எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி முஸ்லிம்கள் பெண்கள் அமைப்புக்களும், தமிழ் பெண்கள் அமைப்புக்களும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.
ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிர்வாகங்களினாலும் முஸ்லிம் அமைச்சர்களின் அடிவருடிகளாலும் மேற்படி பெண்கள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞரை விடுவிக்க தேவையான சகல நடவடிக்கைகளையும் இவர்கள் அனைவரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக பொலிஸாரால் மேற்படி சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை அளிக்கும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டுவருவதாக தெரியவருகின்றது.
குறிப்பாக முஸ்லிம் இளைஞருக்காக ஒய்வு பெற்ற நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா ஆஜராகி, குறித்த இளைஞர் தவறு செய்யவில்லையென வாதிட்டு வருகின்றார்.
கடந்த முறை நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது அடையாள வகுப்பில் பாதிக்கப்பட்ட பெண் சந்தேகநபராக முஸ்லிம் இளைஞரை அடையாளங்காட்டியபோதும் ஜோய் மகிழ் மகாதேவா குறித்த பெண் வலுவழந்தவர் என்பதால் இதனை ஏற்க முடியாது என வாதிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
-Tamilwin
Leave a comment