-MJ
பல புதிய முன்னேற்றங்களுடன் தினம் தினம் உலக உதைப்பந்தாட்ட இரசிகர்களை மகிழ்வித்துச் செல்லும் ஐரோப்பா கிண்ணத்தின் முதலாவது ‘லீக்’ சுற்று நேற்று இரவுடன் நிறைவுபெறுகிறது.
நேற்றிரவு குழு ‘டி’ இற்கான இறுதி ‘லீக்’ போட்டிகள் இடம்பெற்றன. பிரான்ஸ்-சுவீடன் ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற அபார ஆட்டத்தில் பிரான்ஸ் சுவீடனிடம் 2:0 எனும் கோல் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருந்தது. எனினும் மறு போட்டியில் இங்கிலாந்து வெற்றியீட்டியதன் காரணமாக சுவீடன் தொடரிலிருந்து வெளியேறியது.
இங்கிலாந்து- யுக்ரைன் அணிகளுக்கிடையிலான போட்டியில் இங்கிலாந்து 1:0 எனும்கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ரூணி வெற்றி கோலை பெற்றுக் கொடுத்திருந்தார். இம்முறை ஐரோப்பா கிண்ணத்தை நடாத்தும் இரு நாடுகளான போலந்தும் யுக்ரைனும் கால் இறுதிக்குத் தெரிவாகாமல் தோல்வியைத் தழுவி இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.
![Wayne-Rooney-John-Terry_2783196[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/wayne-rooney-john-terry_27831961.jpg?w=300&h=225)
Leave a comment