ஏறாவூரில் தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம்!மக்கள் சந்தேகம்?

-MMS

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கேணி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். ஏறாவூர், ஜின்னா குறுக்கு வீதியை சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான அபூபக்கர் அன்ஸார்(26வயது) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வருகைதந்த திடீர் மரண விசாரணை அதிகாரியான எம்.எஸ்.நஸீர் மற்றும் ஏறாவூர் பொலீசாரும் இதுதொடர்பிலான விசாரணையை மேற்கொண்டனர். சடலம் ஏறாவூர் தளவைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனையை வைத்தியசாலையின் அத்தியட்சர் எஸ்.ஏ.சி.பளீல் மேற்கொண்டார். கயிறினால் கழுத்து இறுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலை மரணம் என திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நஸீர் தனது தீர்ப்பில் தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விசாரனைகளை ஏறாவூர் பொலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இஸ்லாம் கண்டித்திருக்கும் இத்தற்கொலைக்கு முஸ்லிம்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment