குழந்தைகளுக்கான பால்மாக்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று நள்ளிரவுமுதல் 19 வகையான குழந்தைகள் பால்மாக்களின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்றுத் தெரிவித்தார்.
இதன்படி, குழந்தைகளுக்கான பால்மா பக்கற்றுக்கள் ஆகக் குறை ந்தது 2 ரூபாவாலும், ஆகக் கூடியது 404 ரூபாவாலும் குறைக்கப்பட்டு ள்ளன. இது தொடர்பான வர்த்த மானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ள்ளதாக கொழும்பில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார்.
நுகர்வோரின் நலன்கருதி ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப் புரைக்கமைய 19 வகையான குழந்தைகள் பால்மாக்களின் விலை கள் குறைக்கப்பட்டுள்ளன. நுகர் வோர் தெரிவித்த புகார்களுக்கு அமையவே அவற்றின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
விலை குறைப்பு தொடர்பாக குழந்தைகள் பால்மா உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களு டன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும் அதற்கு அந்நிறுவனங்கள் இணங்கவில்லை. இது குறித்து ஆராய்வதற்குக் குழுவொன்று நியமி க்கப்பட்டு ஆராயப்பட்டது. இதற்க மைய விலை குறைப்பு பற்றி வர்த்த மானி அறிவித்தலும் வெளியிடப்ப ட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித் தார்.
நேற்று முதல் சந்தைப்படுத்தப் படும் குழந்தைகள் பால்மா பக்கற்று க்கள் புதிய விலைக்கே விற்பனை செய்யப்பட வேண்டும். இதுவிடயத் தில் நுகர்வோரை ஏமாற்றுவதற்கு வர்த்தகர்கள் முயற்சித்தால் அவர்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக் கப்படும். புதிய விலைகளைக் கண் காணிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடு ப்பார்கள். இது குறித்து நுகர்வோர் அதிகாரசபைக்கு நான் உரிய பணிப் புரைகளை வழங்கியுள்ளேன் என் றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர் னாண்டோ மேலும் கூறினார்.
குழந்தைகளுக்கான பால்மா உற் பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடு பட்டிருக்கும் நிறுவனங்கள் நூற்றுக்கு நூறு, இருநூறு, முந்நூறு வீதம் இலாபம் வைத்து விற்பனை செய்கி ன்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அவற்றின் விலைகளைக் குறைத்து நுகர் வோருக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் குழந்தைகளுக் கான பால்மாவின் விலைகள் குறைக்க ப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
-தினகரன்
Leave a comment