வெற்றி தோல்வியின் விளிம்பில் இருக்கும் இங்கிலாந்துக்கு இன்று ‘ரூணி’ களமிறங்குகிறார்!
-MJ
நேற்றிரவு நடைபெற்று முடிந்த குழு ‘சி’ இற்கான ஐரோப்பாக் கிண்ணப் போட்டியில் இறுதி நேரத்தில் ஸ்பெயின் இட்ட கோல் ஒன்றால் இரண்டாமிடத்திலிருந்த குரோசியா பரிதாபத் தோல்வியைத் தழுவி 1:0 என்ற கோல் வெற்றியில் ஸ்பெயின் ‘சி’ குழுவில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது.
மற்றுமொரு போட்டி இத்தாலி மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் 2:0 எனும் கோல் வித்தியாசத்தில் இத்தாலி வெற்றி பெற்று குழுவில் இரண்டாம் இடத்தை பெற்றிருக்கின்றது.
இன்று நடைபெற இருக்கும் குழு’ டி ‘ இற்கான போட்டியில் வெற்றி பெரும் இரு அணிகள் நேற்று வெற்றிபெற்ற அணிகளுடன் கால் இறுதிப் போட்டியில் மோதவிருக்கின்றன. இன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்து யுக்ரைன் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு, உலக சிறந்த வீர’ர்களுள் ஒருவரும் இங்கிலாந்தின் கனவு வீரரும், மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமுமான வேயன் ரூணி’ களமிரங்க இருப்பது முக்கிய விடயமாகும். இன்றைய போட்டியுடன் முதற் சுற்று ‘லீக்’ போட்டிகள் நிறைவடைகிறது. வியாழக்கிழமை கால் இறுதிப் போட்டிகள் ஆரம்ப மாகின்றன. இப்போட்டிகள் நொக் அவுட் விதிமுறைக்கமைய இடம்பெறும்.
Leave a comment