-MJ
நேற்றிரவு நிறைவடைந்த இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் 248 எனும் பாகிஸ்தானின் ஓட்ட இலக்கை இலங்கை அணி இறுதி ஓவரில் 2 பந்துகள் மீதமிருக்க அபார வெற்றியீட்டி 3:1 எனும் தொடர் வெற்றியைப் பெற்றுக் கொண்டது. 
இறுதிரை இலங்கை அணி சார்பாக அற்புதமாக ஆடிய அன்ஜலோ மத்தியூஸ் 76 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைப் பெற்றார்.
போட்டியின் நாயகனாக அன்ஜலோ மத்தியூஸூம், போட்டித் தொடரின் நாயகனாக திஸ்ஸர பெரேராவும் தெரிவாகினர்.
உலக கிரிக்கட் அணிகளில் களத்தடுப்பில் பலவீனமான அணியாகக் கருதப்படும் பாகிஸ’தானின் பலவீனமான களத்தடுப்பும், நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல் இன்றைய போட்டியில் விளையாடாமையும் இலங்கையின் வெற்றிக்கு வழிசமைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Leave a comment