-1000 : விஞ்ஞான, கணித பட்டதாரிகள்
– 1000 : தொழில் நுட்ப பட்டதாரிகள்
– 1000 : ஆங்கில ஆசிரியர்கள்; டிப்ளோமா தாரிகளையும் இணைக்க திட்டம்
பாடசாலையின் இரண்டாம் தவணை முடிவடைவதற்கு முன்பாக ஆயிரம் பாடசாலை திட்டத்திற்கென பிரத்தியேகமாக மூவாயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லையென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தினகரனுக்கு கூறினார்.
ஆயிரம் பாடசாலை திட்டத்திற்கென கணித, விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பட்டதாரிகள் மூவாயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும். இதன் முதற்கட்டமாகவே எதிர்வரும் 29ஆம் திகதி நேர்முகப் பரீட்சைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்கி வைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஏனைய கணித, விஞ்ஞான மற்றும் ஆங்கில பட்டதாரிகள் இரண்டாயிரம் பேருக்கும் பாடசாலையின் இரண்டாம் தவணை முடிவடைவதற்கு முன்பாக நியமனங்கள் வழங்கி வைக்கப்படுவது உறுதியெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஆயிரம் ஆங்கில பட்ட தாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கு வதற்கு தற்போது போதுமானளவு ஆங் கிலப் பட்டதாரிகள் இல்லாமை பெரும் குறைபாடாக நிலவுவதனால் இந் நிய மனத் திட்டத்திற்குள், ஆங்கில டிப்ளோமா கற்கைநெறிகளை பூர்த்தி செய்துள்ள வர்களையும் இணைத்துக்கொள்வது தொடர்பான யோசனையை அமைச்சரவைக்கு முன்வைக்க தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் முடிவடைந்துள்ள நிலையில், தெரிவுசெய்யப்பட்டுள்ள ஆயிரம் பட்டதாரிகளுக்கான பாடசாலைகள் தெரிவே தற்போது நடைபெற்று வருகிறது. குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி பெரும்பாலும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலைக்கோ அல்லது அருகிலிருக்கும் ஏனைய மாவட்டப் பாடசாலைக்கோ நியமிக்கப்படலாம்.
நியமனம் பெறும் ஆசிரியர்கள் அவர் களது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ள பாடசாலையில் ஆகக்குறைந்தது ஐந்து வருடங்களாயினும் கடமையாற்றப்பட வேண்டியது கட்டாயம். எக்காரணம் கொண்டும் பாடசாலைகள் மாற்றி வழங் கப்படமாட்டாது. பட்டதாரி குறிப்பிடப்பட்ட பாடசாலையில் கடமையாற்ற விரும்பாத பட்சத்தில் அவரது நியமனம் ரத்துச் செய்யப்பட்டு இன்னுமொரு பட்டதாரிக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் அமைச்சர் உறுதியாக கூறினார்.
இதேவேளை, ஆயிரம் கணித, விஞ் ஞான பட்டதாரிகளுக்கு நியமனம் வழங் குவது குறித்தும் அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. இரண்டாம் தவணை நிறைவடைவதற்கு முன்னதாக கணித, விஞ்ஞான மற்றும் ஆங்கில பட்டதாரிகள் 2 ஆயிரம் பேருக்கும் நிய மனங்கள் தாம் கடமையாற்றப்பட வேண்டிய பாடசாலைகளுடனேயே வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மஹிந்த சிந்தனையின் கீழ் மாவட்டந் தோறும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆயிரம் பாடசாலைத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேவையாற்றவெனவே பிரத்தியேகமாக இந்த மூவாயிரம் பட்டதாரி ஆசிரியர் களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள் ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏற்கனவே தமது ஆசிரிய பயிற்சிக்கான டிப்ளோமா கற்கை நெறி களை கல்வியியற் கல்லூரிகளில் முடித்துக் கொண்டுள்ள மூவாயிரம் மாணவர்களுக்கும் எதிர்வரும் 29ஆம் திகதியன்று தொழில்நுட்ப பட்டதாரிகளுடன் இணைந்து ஆசிரிய நியமனங்கள் வழங்கி வைக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
-thinakaran
Leave a comment