-அஷ்ஷெய்ஹ்: CMM. அமானி
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ
எமதூரின் சில பகுதிகளில் மாற்றுமத சகோதரர்கள் சிலரால் 30.05.2012 புதன்கிழமை அன்றும் அதற்கு முன்னரும் ‘ரூஹ் அல்லாஹ்’ எனும் தலைப்பிலான பச்சை நிற சிறு புத்தகம் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான கருத்துக்கள் காணப்படுவதுடன் இப்புத்தகத்தின் பின் அட்டையில் புனித அல்குர்ஆன் வசனம் வேண்டுமென்று மாற்றப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. எனவே இப்புத்தகம் கிடைக்கப்பெற்ற பொதுமக்கள் இவற்றை வாசித்து, தங்களது ஈமானை குழப்பிக் கொள்ளாமல் இப்புத்தகங்களை தங்களது மஹல்லா பள்ளிவாயல்களில் ஒப்டைக்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் எமது ஈமானைப் பாதுகாத்து தூய இஸ்லாத்தில் நிலைத்திருக்கச் செய்வானாக
இவ்வண்ணம்,
ஜம்இய்யதுல் உலமா,
காத்தான்குடி.
Leave a comment