ஐரோப்பா கிண்ணம்: குழு ‘பி’ – ஜேர்மனி, போர்த்துக்கல் கால் இறுதிப் போட்டிக்குத் தெரிவு!

-MJ

நேற்றிரவு நடைபெற்று முடிந்த குழு ‘பி’ அணிகளுக்கிடையிலான ‘லீக்’ சுற்று போட்டிகளில் ஜேர்மனியை எதிர்த்து டென்மார்க்கும் போர்த்துக்கலை எதிர்த்து நெதர்லாந்தும் விளையாடின. இரு போட்டிகளும் இறுதிவரை பலத்த பலப்பரீட்சைக்கு மத்தியிலேயே நிறைவுபெற்றிருந்தன.

ஜேர்மனி-டென்மார்க் போட்டியில் 2:1 எனும் கோல் வித்தியாசத்தில் ஜெர்மனி வெற்றி பெற்றது. போர்த்துக்கல்-நெதர்லாந்து போட்டியில் 2:1 கோல் வித்தியாசத்தில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது. போர்த்துக்களின் வெற்றிக்காக உலக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்களைப் பெற்றுக் கொடுத்தமை இப்போட்டியின் ஓர் சிறப்பம்சமாகும். ஜேர்மனியும் போர்த்துக்கலும் கால் இறுதிக்குத் தெரிவாகி இருக்கின்றன.

இந்த வகையில் முதலாவது கால் இறுதி போட்டி வியாழக்கிழமை நடைபெற இருக்கின்றது. இதில் போர்த்துக்களும் செக் குடியரசும் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன. இரண்டாவது கால் இறுதி போட்டியில் ஜெர்மனியும் கிறீஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி வெள்ளிக்கிழமை இடம்பெறுகிறது. குழு ‘சி’  இற்கான போட்டிகள் இன்றும் குழு’ டி’ இற்கான போட்டிகள் நாளையும் நடைபெற இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment