இலங்கை வங்கி வரலாற்று சாதனை: ஒரு ரில்லியன் ரூபா இலக்கை எட்டியது

வரலாற்றில் முதன்முறையாக இலங்கை வங்கி, ஐந்தொகையில் ஒரு ரில்லியன் ரூபா என்ற பாரிய இலக்கை அடைந்துள்ளது. 2012ஆம் ஆண்டு இறுதியில் இந்த இலக்கை அடைவதற்கு எதிர்பார்த்திருந்தபோதிலும் மே மாதம் 31ஆம் திகதியே இந்த இலக்கை அடையமுடிந்திருப்பதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன் மூலம் இலங்கையிலுள்ள நிறுவனமொன்று வருமானங்கள், சொத்துக்கள் மற்றும் செலவுகளைக் கொண்ட ஐந்தொகை யில் அதிகூடிய பெறுமதியான ஒரு ரில் லியன் ரூபா என்ற மீதியைப் பெற்ற ஒரே நிறுவனம் என்ற பெருமையையும் இலங்கை வங்கி பெற்றுள்ளது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த இலக்கை அடைந்திருப்பதாக இலங்கை வங்கியின் தலைவர் தினகரனுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், யுத்தம் முடிவடைந்த இரண்டரை வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில் இந்த இலக்கை எம்மால் அடையமுடிந்துள்ளது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்த அதே சமயம், நாட்டை அபிவிருத்தியை நோக் கிக் கொண்டுசெல்லும் பல்வேறு நடவடிக் கைகளுக்கு உதவிசெய்து கொண்டுமே நாம் இந்த இலக்கை அடைந்துள்ளோம். இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்படுத்திய அடித்தளத்தைக் கொண்டும் எமது முயற் சியின் மூலமும் இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது.

2012ஆம் ஆண்டு ஐந்தொகையில் ஒரு ரில்லியன் ரூபா என்ற மீதியை அடைந் திருக்கும் அதேசமயம், 2012ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட 10 பில்லியன் ரூபா இலாபம் 2010ஆம் ஆண்டே எட்டப்பட்டு விட்டது. 2011ஆம் ஆண்டு 15 பில்லியன் ரூபா இலாபத்தை எட்டமுடிந்தது.

மக்களுக்காகச் சேவை செய்து கொண்டே இந்த இலக்கை எட்டமுடிந்துள்ளது. இந்த இலக்கை மேலும் அதிகரித்துச் செல்வதற்கான திட்டங்களையும் நாம் வகுத்துள்ளோம்.

வெளிநாட்டுக் கொடுக்கல், வாங்கல்களை அதிகரித்தல் மற்றும் இலங்கை வங்கியை சர்வதேச மயமாக்கல் மூலம் எமது இந்த இலக்கை மேலும் அதிகரித்துச் செல்ல முடியும்.

இலங்கையர்களின் தலா வருமானத்தை 4 ஆயிரம் டொலர்களாக அதிகரிக்க வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இலக்கை அடைவ தாயின் நாம் தற்பொழுது அடைந்திருக்கும் ஒரு ரில்லியன் என்ற இலக்கு இரண்டரை மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்.

இலங்கை வங்கி வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு வகையிலான உதவிகளை செய்து வருகிறது.

நாட்டை அபிவிருத்தி செய்வதில் பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றது. நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட் டிருக்கும் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கும் இலங்கை வங்கி பல மில்லியன் ரூபா உதவிகளைச் செய்துள்ளது என்றார்.

இலங்கை வங்கி இந்தியாவில் மேலும் மூன்று கிளைகளைத் திறக்கவிருப்பதுடன், பாகிஸ்தான், அமெரிக்கா, ஐரோப்பா. ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கிளைகளைத் திறப்பது தொடர்பில் கவனம் செலுத்தி யுள்ளது.

இலங்கை வங்கியின் செயற்பாடுகள் ஏனைய வங்கிகளையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருக்கும். ஒருபோதும் எந்தவொரு வங்கியையும் பாதிக்கும் வகையில் தமது செயற்பாடுகள் அமையாது என இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

-THINAKARAN

Published by

Leave a comment