ஐரோப்பா கிண்ணம்: ரஷ்யா, போலந்து வெளியே!

-MJ

நேற்றிரவு நடைபெற்று முடிந்த ‘ஏ’ பிரிவு அணிகளுக்கிடையிலான போட்டியில் பல எதிர்பார்ப்புக்களுடன் களமிறங்கிய ரஷ்யா, பலத்த சரிவை எதிர்நோக்கி வந்த 2004 ஐரோப்பா கிண்ண சம்பியனான கிறீஸ் அணியுடன் 1:0 என்ற கோல்வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவி ஐரோப்பா கிண்ணத்திலிருந்து வெளியேறுகிறது.

இதேபோல் இம்முறை ஐரோப்பா கிண்ணத்தை நடாத்தும் இரு நாடுகளுள் ஒன்றான போலந்து செக் குடியரசுடன் 1:0 எனும் கோல் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இத்தொடரிலிருந்து வெளியேறுகிறது.

இந்நிலையில் 6 புள்ளிகளுடன் செக் குடியரசு முதலாவது இடத்திலும் 4 புள்ளிகளுடன் கிறீஸ் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. இதைவிட இன்று ‘பி’ குழுக்கான இரு முக்கிய போட்டிகள் இடம்பெற இருக்கின்றன. இக்குழுவில் ஜேர்மனி முதலாவது இடத்திலும் போர்த்துக்கல் இரண்டாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment